கம்பராமாயணம் 4401 · கிட்கிந்தா 10.43

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நீர் எலாம் அயல் நீங்குமின்; நேர்ந்து யான்
வீரன் உள்ளம் வினவுவன்'என்றலும்
பேர நின்றனர் யாவரும்; பேர்கலாத்
தாரை சென்றனள் தாழ் குழலாரொடும்.

பொருள் · Meaning in Tamil

நீர் எலாம் - (அங்கதன் முதலானவர்களைப் பார்த்து) நீங்கள் எல்லோரும்; அயல் நீங்குமின் - அப்பாலே செல்லுங்கள்; யான் நேர்ந்து - நான் (இலக்குவன் எதிரே சென்று; வீரன் உள்ளம் - வீரனான அவனது மனக் கருத்தை; வினவுவல் என்றலும் - வினவி அறிவேன் என்று சொன்ன அளவில்; யாவரும் பேர நின்றனர் - அந்த வானரர்கள் யாவரும் விலகிச் சென்று நின்றார்கள் (உடனே); பேர்கலாத் தாரை - நெறிமுறைகளில் பின்னிடாத தாரை; தாழ் குழலாரொடும் - மலர் சூடிய கூந்தலையுடைய தோழியரோடு; சென்றனள் - புறப்பட்டுச் சென்றாள்.

பெண்களை எதிர்க்க மாட்டான் என்பதை 'வீரன்' என்ற சொல் உணர்த்துகின்றது. பேர, பேர்கலா - முரண் தொடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'All of you, stand aside; I will go to meet him
  2. and ask what is in the hero's mind,' she said, and at that
  3. everyone drew back; and Tārai, who does not waver,
  4. went forward with her long-haired women.

What the poem says

Tārai sends the monkey warriors out of the way and goes herself, with her women attendants, to meet Ilakkuvaṉ and learn his purpose.

Calling him 'the hero' implies that he will not fight women. The verse also contrasts the others, who 'drew back', with Tārai, who 'does not waver'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nīr elām ayal nīṅkumiṉ; nērntu yāṉ
vīraṉ uḷḷam viṉavuval' eṉṟalum
pēra niṉṟaṉar yāvarum; pērkalāt
tārai ceṉṟaṉaḷ tāḻ kuḻalāroṭum.