கம்பராமாயணம் 4408 · கிட்கிந்தா 10.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இசையினும் - இசையைக் காட்டிலும், இனிய சொல்லாள் - இனிமையான சொற்களையுடைய தாரை; வீர! நீ வெய்தின் - வீரனே நீ சீற்றத்தோடு; வருதல் நோக்கி - வருவதைப் பார்த்து; சேனை செய்தி தான் உணர்கிலாது - (இந்த) வானர சேனை (நீ) வருகின்ற காரணத்தை (இன்னதென்று) அறியாமல்; வெருவுறும் - அஞ்சும்; திருவுளம் தெரித்தி - (அதன் அச்சம் நீக்குமாறு) உனது மனக் கருத்தை அறிந்து சொல்வாய்; என்றார் - என்று சொன்னார்கள்; ஐய! ஆழி வேந்தன் - ஐயனே! ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும் மன்னனான இராமனின்; அடி இணை - திருவடிகளை; பிரிகலாதாய் நீ - எப்பொழுதும் பிரியாது உடன் தங்கியிருப்பவனாகிய நீ; எய்தியது என்னை - இங்குத் தனியே வந்த செயல் என்ன என்று கேட்டாள்.
'வீரனே! நீ கோபத்தோடு வருவதை அறிந்த காரணம் புரியாது வானரசேனை அஞ்சிக் கலங்கியது; இராமனை என்றும் பிரியாத நீ இன்று தனியே பிரிந்து வந்த காரணம் என்ன' என்று தாரை வினவினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Seeing you come in anger, hero, the army is afraid;
- not knowing the reason, they said, "Let him make his gracious mind known."
- Sir, you who never leave the feet of the king of the wheel,
- why have you come?' she asked, she whose words were sweeter than music.
What the poem says
Tārai, whose voice is sweeter than music, explains that the monkeys are frightened because Ilakkuvaṉ has come in such anger and they do not know why. Then she asks him directly why he, who never leaves the side of Irāmaṉ, the sovereign 'of the wheel', has come here alone.