கம்பராமாயணம் 4449 · கிட்கிந்தா 10.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெளிந்து தீவினையைச் செற்றார் - மனம் தெளிந்து தீச்செயல்கள் செய்வதை விட்டவர்; பிறவியின் தீர்வர் - பிறவித் துன்பத்திலிருந்து நீங்கினவர் ஆவர்; என்னா - என்று; விளிந்திலா உணர்வினோரும் - அழியாத அறிவுடைய தத்துவ ஞானிகளும்; வேதமும் - நான்மறைகளும்; விளம்பவேயும் - சொல்லியிருக்கவும் (உணர்வில்லாமல்); அகத்து அளிந்து எரியும் தீயை - வீட்டில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை; நெய்யினால் அவிக்கின்றாரின்- நெய்யைக் கொண்டு அணைக்கத் தொடங்குகின்றவரைப் போல; நெளிந்து உறை - நெளிந்து கொண்டு அதில் தங்கியுள்ள; புழுவை நீக்கி - புழுக்களை எடுத்தெறிந்து விட்டு; நறவு உண்டு - கள்ளைக் குடித்து; நிறைகின்றேன் - களிப்பில் மூழ்கி வாழ்வில் (போலியான நிறைவு காணுகின்றேன் நான்.
மூண்டெரியும் நெருப்பில் நெய்யைச் சொரிந்தால் அந்த நெருப்பு அவியாது, மேன்மேல் வளருவதுபோல, இயற்கையில் மாயைக்கு வசப்பட்டுத் தீவினையில் உழல்கின்றவர்கள் குடிப்பதையும் மேற்கொள்வது தீவினை வளர்வதற்கே காரணமாய் முடியுமென்பது.
'நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் - (குறள்:1148)
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"Those who see clearly and destroy evil deeds are freed from birth" —
- though sages of undying wisdom and the Vedas declare this,
- I pick out the worms that wriggle and live in it and fill myself with toddy,
- like those who would put out a fire blazing in the house with ghee.'
What the poem says
Cukkirīvaṉ goes on. The sages and the Vedas teach that those who see truly and put an end to evil acts are released from rebirth. Yet he, knowing this, has been fishing the wriggling worms out of his toddy and drinking his fill.
The closing image: drinking to escape misery is like pouring ghee on a house fire to put it out; it only makes the blaze greater. The commentary compares a Tirukkuṟaḷ couplet that uses the same image of quenching fire with ghee.