கம்பராமாயணம் 4561 · கிட்கிந்தா 12.24

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரன் அதிகன் - சிவபிரானே சிறந்த கடவுள்; உலகு அளந்த அரி அதிகன் - உலகங்களை (தன் திருவடிகளால்) அளவிட்ட திருமாலே சிறந்த கடவுள்; என்று உரைக்கும் - என்று கூறும்; அறிவு இலோர்க்கு - தத்துவ அறிவு இல்லாத மூடர்களுக்கு; பரகதி சென்று அடைவு அரிய பரிசேபோல் - மேலான கதியைச் சென்று அடைவதற்கு அரிய தன்மைபோல; புகல் அரிய பண்பிற்று ஆம் - புகுதற்கரிய தன்மை பெற்றதும்; சுரநதியின் அயலது - ஆகாயகங்கையின் அருகில் உள்ளதும்; வான் தோய் குடுமிச் சுடர் தொகைய - வானத்தையளாவிய தன் சிகரங்களில் (கதிர் மதியாகிய) இரண்டு சுடர்களும் சேரக் கூடியதும்; தொழுதோர்க்கு எல்லாம் - தன்னை வணங்கியவர் எல்லோர்க்கும், அதிகம் வரன் தரும் தகைய - சிறந்த வரங்களைக் கொடுக்கும் பெருமையுடையதுமான; அருந்ததி ஆம் நெடு மலையை - அருந்ததியென்னும் பெரிய மலையை; வணங்கி - (நீங்கள் சென்று) தொழுது; அப்பால் - அதன் பிறகு. ...

கவிஞர்களுக்குக் கடவுளிடத்துள்ள பொதுநோக்கத்தைக் குறிப்பதாகும் இச் செய்யுள். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றும் வானத்திலிருந்து விழும் மழைத் தாரைகள் அனைத்தும் கடலையே சென்று சேர்வது போன்று சீவான் மாக்கள் எவ்வெத் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தினும் அவ்வணக்கம் கேசவனையே சாருமென்றும், யாதொரு தெய்வங் கொண்டீர் அத் தெய்வமாக, யங்கு மாதொருபாகனார்தாம் வருவர், என்றும் கூறப்படுவன காணலாம்.

வைணவத்தில் முதலாழ்வார்களின் பாசுரங்களில் சிவபிரானையும், திருமாலையும் ஒன்று படுத்திக் கூறியிருப்பதைக் காணமுடிகிறது. 'அரன்நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி' - (முதல் திருவ. 5); 'தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்' (மூன்றாம் திருவ. 63)

வசிட்ட முனிவனின் அரிய பத்தினியான அருந்ததியின் பெயர் கொண்ட மலையாதலின் 'அருந்ததி மா நெடுமலை' எனச் சிறப்பித்தான் சுக்கிரீவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Like the way the highest state is hard to reach for the foolish who say
  2. "Araṉ is greater" or "Ari who measured the world is greater", it is of a nature hard to enter;
  3. it stands beside the river of the gods, its sky-touching crests gathering the lights of heaven; to all who worship it
  4. it grants abundant boons: bow to that tall mountain, Aruntati, and beyond it...'

What the poem says

The next landmark is Mount Aruntati, named after Arundhatī, the devoted wife of the sage Vasiṣṭha. It stands beside the heavenly Ganges, its peaks touch the sun and moon, and it grants boons to all who worship it.

The mountain is as hard to enter as salvation is for fools who quarrel over whether Śiva (Araṉ) or Vishnu (Ari) is the greater god. The commentary sees in this a non-sectarian outlook and cites early Vaishnava hymns that speak of Śiva and Vishnu as one. The sentence continues in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"araṉ atikaṉ, ulaku aḷanta ari atikaṉ" eṉṟu uraikkum aṟivilōrkkup
para kati ceṉṟu aṭaivu ariya paricēpōl pukal ariya paṇpiṟṟu āmāl;
cura natiyiṉ ayalatu, vāṉ tōy kuṭumic cuṭart tokaiya, toḻutōrkku ellām
varaṉ atikam tarum takaiya aruntati ām neṭu malaiyai vaṇaṅki appāl.