கம்பராமாயணம் 4595 · கிட்கிந்தா 12.58

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கொண்டலின் குழவி, ஆம்பல், குனிசிலை, வள்ளை, கொற்றக்
கெண்டை, ஒண் தரளம், என்று இக் கேண்மைய கிடந்த திங்கள்
மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ அப்
புண்டரீகத்தை உற்ற பொழுது அது பொருந்தி ஓர்வாய்'

பொருள் · Meaning in Tamil

கொண்டலின் குழவி - கருமேகத்தின் கொழுந்தும்; ஆம்பல் - செவ்வல்லி மலரும்; குனி சிலை - வளைந்த விற்களும்; வள்ளை - வள்ளைக் கொடியும்; கொற்றக் கெண்டை - வெற்றி மிகுந்த கெண்டை மீன்களும்; ஒண் தரளம் - ஒளி பொருந்திய முத்துக்களும்; என்ற இக்கேண்மையின் - என்று சொல்லப்பட்ட இத் தன்மையவான பொருள்கள்; கிடந்த - அமையப்பெற்ற, திங்கள் மண்டிலம் - சந்திர மண்டலத்தை, விதியே - பிரமனே; வதனம் என்று வைத்தனன் - சீதையின் முகமென்று அமைத்து வைத்தான்; நீ அப் புண்டரிகத்தை - நீ (சீதையின் அந்தத் தாமரை முகத்தை; உற்ற பொழுது - நெருங்கக் காணும் பொழுது; அது பொருந்தி ஓர்வாய் - அத் தன்மையை நன்றாக ஆராய்ந்து அறிவாய்.

கொண்டல் குழவி அளகத்திற்கும், செவ்வாம்பல் வாய்க்கும், வளைந்த விற்கள் புருவங்களுக்கும் வள்ளையிலை காதுகளுக்கும், கெண்டை மீன்கள் கண்களுக்கும், முத்துக்கள் பற்களுக்கும் உவமையாயின. காண்பதற்கு இனிமையிலும், நிறத்திலும், கண்டோரை மகிழ்வித்தலிலும் முகத்திற்குத் தாமரை மலர் உவமையாயிற்று.

சீதையின் முகமென்று பெயரிட்டுக் கொண்டலின் குழவி முதலியவற்றையுடையதொரு சந்திரமண்டலத்தைப் பிரமதேவன் படைத்தான் என்று கூறியது வஞ்சவொழிப்பணி. கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர் (சிலப். கானல். 11) என்ற சிலப்பதிகார வரிகளில் உள்ள கற்பனை இங்கே நினைவுகூரத் தக்கது. விதி - பிரமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A young dark cloud, the red water-lily, curved bows, the vaḷḷai leaf, the conquering
  2. keṇṭai fish and bright pearls: the orb of the moon in which such kindred things lie
  3. is what Fate itself set there and called her face; when you come upon
  4. that lotus, consider it closely and you will know.

What the poem says

Irāmaṉ sums up Cītai's face: the Creator took the full moon and placed in it a young dark cloud for her hair, a red water-lily for her lips, curved bows for her brows, vaḷḷai leaves for her ears, keṇṭai fish for her eyes and pearls for her teeth, and named it her face.

He also calls her face a lotus. The fancy recalls a song in the Cilappatikāram, where a woman's face is said to be a moon on which someone has painted fish, bows and a cloud.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'koṇṭaliṉ kuḻavi, āmpal, kuṉi cilai, vaḷḷai, koṟṟak
keṇṭai, oṇ taraḷam, eṉṟu ik kēṇmaiyiṉ kiṭanta tiṅkaḷ
maṇṭalam vataṉam eṉṟu vaittaṉaṉ, vitiyē; nī ap
puṇṭarīkattai uṟṟa poḻutu atu porunti ōrvāy'