கம்பராமாயணம் 468 · பால 9.2

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவர் - அம் மூவரும்; நதிக்கு வந்து எய்தலும் - சோணையாற்றுக்கு வந்து சேர்ந்த சமயத்தில்; கதிரோன் உதிக்கும் காலையில் - ஆயிரம் கதிர்களையுடைய சூரியன் மறுநாள் தான் கிழக்குத் திசையில் உதிக்கும் பொழுது; தண்மை செய்வான் - (அம்மூவர்க்கும்) குளிர்ச்சி தரும் பொருட்டு; தனது உருவில் கொதிக்கும் வெம்மையை - தனது வடிவத்திலே இயல்பாக எப்பொழுதும் கொதிக்கின்ற வெப்பத்தை; ஆற்றுவான் போல் - இப்பொழுது தணித்துக் கொள்பவனைப்போல; அருணன் தன் நயனம் - (தன் சாரதியாகிய) அருணனுடைய கண்கள்; கதிக்கும் - விரைந்து செல்வதைக் காட்டிலும்; முந்துறு கலினம் மான் - முந்திச் செல்லுகின்ற கடிவாளத்தைக் கொண்ட குதிரைகள் பூட்டிய; தேரொடும் - தனது தேருடன்; கடல் குளித்தான் - மேற்குக் கடலில் மூழ்கினான்.

தற்குறிப்பேற்ற அணி: மேற்கில் கதிரவன் மறைதலை, அவன் தன் வெம்மையைத் தணிக்கும்பொருட்டு மேற்குக் கடலில் மூழ்கியதாக வருணித்தார் கதிரவன் முதலான கிரகங்கள், நட்சத்திரங்கள் மேற்கே மறைந்து கிழக்கே உதிக்கும். அதனை மேற்குக் கடலில் மூழ்கி மறைந்து கிழக்குக் கடலில் மீண்டும் எழுவதாகக் கூறுதல் கவிமரபு. தேர்ப்பாகனும் குதிரையும்: தேர்ச் சாரதியின் கண் பார்வை எவ்வளவு தூரம் செல்லுமோ அதைவிட அதிக தூரம் அவனது குதிரைகள் செல்லும். அருணன்: கதிரவனின் தேர்ப்பாகன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As they reached the river, with his chariot drawn by bridled steeds
  2. that outrun even the glance of Aruṇaṉ's eyes, the sun,
  3. as if to cool the boiling heat of his own body so as to give them coolness
  4. when he rose in the morning, plunged into the sea.

What the poem says

The travellers reach the river at sunset. The sun's horses are so swift that they outrun even the eyesight of Aruṇaṉ, his charioteer, and the chariot sinks into the western sea.

The poet imagines a kindly reason: the sun is bathing to cool his own blazing body, so that when he rises tomorrow he will not scorch the three travellers. Poets conventionally describe the sun as plunging into the western ocean and rising from the eastern one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1natikku vantu avar eytalum, aruṇaṉtaṉ nayaṉak
katikku muntuṟu kaliṉa māṉ tēroṭum, katirōṉ
utikkum kālaiyil taṇmai ceyvāṉ taṉatu uruvil
kotikkum vemmaiyai āṟṟuvāṉ pōl kaṭal kuḷittāṉ.