கம்பராமாயணம் 4767 · கிட்கிந்தா 16.8

Section கிட்கிந்தா காண்டம் / 16. மயேந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனானும்,
காரியம் எண்ணிச் சோர்வு அற முற்றும் கடனானும்
மாருதி ஒப்பார் வேறு இலை' என்னா, அயன் மைந்தன்,
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான், இவை செப்பும்.

பொருள் · Meaning in Tamil

ஆரியன் முன்னர் - (முதலில்) இராமபிரானின் எதிரே சென்று; போதுற உற்ற அதனானும் - (இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும்) நட்புச் செய்வித்த தன்மையாலும்; காரியம் எண்ணி - (தான்) மேற்கொண்ட செயலை ஆராய்ந்து; சோர்வு அற முற்றும் - சிறிதும் சோர்வில்லாமல் முடிக்கும்; கடனானும் - கடமையைக் கைக் கொண்டமையாலும், மாருதி ஒப்பார் வேறு இலை என்னா - மாருதியையொப்பவர் வேறெ ஒருவருமில்லை என்று சொல்லி; சீரியன் மல்தோள் - சிறந்தவனான அந்த அனுமனது மற்போருக்கு உரிய தோள்களின்; ஆண்மை தெரிப்பான் - வலிமையைத் தெரிவிக்கும் பொருட்டு; இவை செப்பும் - இவ்வாறான மொழிகளை அனுமனைப் பார்த்து கூறலானான்; அயன் மைந்தன் - பிரமன் புதல்வனான சாம்பவான்.

தெரித்தல்: தெரியச் சொல்லுதல். இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்பைச் செய்தவனும், தான் மேற்கொண்ட செயலை ஆராய்ந்து சோர்வில்லாமல் முடிக்கவல்லவனுமாகிய அனுமனையொப்பவர் வேறு யாருமில்லையென்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Because he was the one who went first before the noble one and brought about the bond,
  2. and because it is his way to weigh a task and finish it without flagging,
  3. there is no one like Māruti.” So saying, the son of Ayaṉ,
  4. to bring out the manly power of that excellent one's wrestler's shoulders, spoke these words.

What the poem says

Cāmpavaṉ, son of Ayaṉ (Piramaṉ), gives his reasons for choosing Māruti, the Wind's son Aṉumaṉ: he was the first to meet Irāmaṉ and arranged the alliance with Cukkirīvaṉ, and he always thinks a task through and carries it to the end without tiring. Turning to Aṉumaṉ, he now begins a speech meant to wake him to his own strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āriyaṉ muṉṉarp pōtuṟa uṟṟa ataṉālum,
kāriyam eṇṇic cōrvu aṟa muṟṟum kaṭaṉālum
māruti oppār vēṟu ilai' eṉṉā, ayaṉ maintaṉ,
cīriyaṉ mal tōḷ āṇmai virippāṉ, ivai ceppum.