கம்பராமாயணம் 4778 · கிட்கிந்தா 16.19

Section கிட்கிந்தா காண்டம் / 16. மயேந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏகுமின்; ஏகி, எம் உயிர் நல்கி, இசை கொள்ளீர்;
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் உய்யும்படி செய்யீர்;
சாகரம் முற்றும தாவிடும் நீர் இக்கடல் தாவும்
வேகம் அமைந்தீர்'என்று விரிஞ்சன் மகன் விட்டான்.

பொருள் · Meaning in Tamil

நீர் - நீவிர்; இக்கடல் தாவும் - இந்தக் கடலைக் கடந்து சென்று மீளுவதற்குரிய; வேகம் அமைந்தீர் - வலிமை பொருந்தியுள்ளீர் (ஆதலால்); ஏகுமின் - விரைந்து செல்லுக; ஏகி - அவ்வாறு சென்று; எம் உயிர் நல்கி இசை கொள்வீர் - எங்களுக்கெல்லாம் உயிரைக் கொடுத்துப் பெரும் புகழையடையுங்கள்; உம் மன்னையும் - உம் தலைவனாகிய இராமபிரானையும்; ஓகை கொணர்ந்து - (சீதை இலங்கையிலுள்ள) மகிழ்ச்சியான நல்ல செய்தியைக் கொண்டுவந்து; இன்னல் குறைவு இல்லாச் சாகரம் - (சீதையின் பிரிவாலான) குறையாத துன்பக் கடல்; முற்றும் தாவிடும் - முழுவதையும் கடந்து கரையேறச் செய்யும்; என்று - என்று கூறி; விரிஞ்சன் மகன் - பிரமகுமாரனான சாம்பவான்; விட்டான் - (கடலைக் கடந்து செல்லுமாறு) அனுமனைத் தூண்டிவிட்டான்.

நீர் கடல் கடந்து சென்றால் இராமபிரானையும் துன்பக் கடலிலிருந்து கரையேற்றியவராவீர் என்று சாம்பன் குறிப்பாகப் புலப்படுத்தியிருப்பதை அறியலாம். எம்முயிர் நல்கி இசை கொள்வீர்: நீர் கடல்கடந்து திரும்பிவந்தால் நாங்களும் இப்போது நினைத்தவாறு இறவாமற் பிழைப்போம்; இவ்வாறு பலரது உயிரைக் காப்பாற்றுவதால் பெரும்புகழும் உமக்குக் கிடைக்கும் என்றவாறு. தவிர, சீதை, இராமபிரான் முதலிய அனைவரின் துயரமும், தேவர்துன்பமும் நீங்கக் காரணமாகிய புகழ் எனலாம். மன் - சுக்கிரீவனைக் குறித்ததாகவும் கொள்ளலாம். ஓகை: உவகை என்ற சொல்லின் திரிபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Go; and going, give us back our lives and win renown;
  2. bring the glad news, and carry your lord across the whole of his
  3. unending ocean of grief; you have the speed
  4. to leap this sea.” So the son of Viriñcaṉ urged him on.

What the poem says

Cāmpavaṉ, son of Piramaṉ, ends his appeal. If Aṉumaṉ crosses and returns, the monkeys, who had resolved to die rather than go home empty-handed, will live, so he will be giving them back their lives. And by bringing the happy news that Cītai is alive in Ilaṅkai, he will carry Irāmaṉ across his own sea of grief. The poet sets the real ocean beside this ocean of sorrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēkumiṉ; ēki, em uyir nalki, icai koḷvīr;
ōkai koṇarntu um maṉṉaiyum iṉṉal kuṟaivu illāc
cākaram muṟṟum tāviṭum nīr ik kaṭal tāvum
vēkam amaintīr' eṉṟu viriñcaṉ makaṉ viṭṭāṉ.