கம்பராமாயணம் 4784 · கிட்கிந்தா 16.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யான் - நான்; எறி கடல் இலங்கை எய்தி - அலைவீசும் கடலால் சூழப் பெற்ற இலங்கை நகரையடைந்து; மீண்டு இவண் வருதல் காறும் - இங்கே திரும்பி வருகின்ற வரையிலும்; ஈண்டு இனிது உறைமின் - (நீங்கள்) இந்த இடத்தில் தங்கியிருங்கள்; விரைவின் விடை தம்மின் - (எனக்கு) விரைவிலே விடை கொடுங்கள்; என்னா - என்று சொல்லி; (அனுமன்); ஆண்டு அவர் உவந்து வாழ்த்த - அப்பொழுது அந்த வானர வீரர்கள் மகிழ்ந்து வாழ்த்துக் கூறவும்; அமரர் அலர் மழை தூவ - தேவர்கள் பூமாரி பொழியவும்; சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து - வானத்தையளாவிய சிகரங்களையுடைய தெய்வத் தன்மையுள்ள மகேந்திரமலையினது; உம்பர்ச் சென்றான் - உச்சிக்குப் போய்ச் சேர்ந்தான்.
உறைமின், தம்மின்: முன்னிலைப் பன்மை வினை முற்றுக்கள்
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Stay here in comfort, until I alone reach Ilaṅkai in the wave-dashed sea
- and come back to this place; give me leave, and quickly,” he said,
- and as they gladly blessed him there and the gods showered rain of blossoms,
- he went up to the top of divine Mayēntiram, whose peaks reach into the sky.
What the poem says
Aṉumaṉ asks his companions to wait on the shore until he returns, and to give him leave to go at once. The monkeys bless him joyfully, the gods rain flowers, and he climbs to the summit of Mount Mayēntiram (Mahendra), the sky-high peak on the coast from which he will make his leap.