கம்பராமாயணம் 5304 · சுந்தர 5.29

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எனநினைந்து - என்றுகருதி; (அனுமனை) எய்த நோக்கி - செவ்வையாக நோக்கி (இவனால்); என் உள்ளம் இரங்கும் - என் மனம் இவனால் உருகும்; (இவன்) மனன் அகத்து - உள்ளத்தின் கண்ணே; கள்ளம் உடையர் ஆய - கபடத்தைப் பெற்றிருப்பவரான; வஞ்சகர் மாற்றம் அல்லன் - வஞ்சகர்களின் சொற்களை உடையவன் அல்லன்; கண்ணீர் நிலம்புக - கண்ணீரானது பூமியில் விழ; நினைவு உடைச் சொற்கள் - வருத்தத்தால் வந்த சொற்களை; புலம்பா நின்றான் - அழுகையுடன் பேசுகின்றான் (ஆகையாலே) (இவன்) வினவுதற்கு உரியன் - பேசுவதற்குத் தகுதியுடையவன்; என்னா - என்று ஆராய்ந்தறிந்து (பிராட்டி); வீர- வீரனே; நீ யாவன் - நீ எவன்; என்றாள் - என்று வினவினாள்.

இவன் தோற்றம் என்னை உருக்கிற்று. இவன் பேச்சு வஞ்சகமின்மையை உணர்த்திற்று. இவன் புலம்புதல் இவன்தூய்மையைக் காட்டிற்று. ஆதலின் இவன் வினவுதற்கு உரியன் என்று பிராட்டி முடிவு கட்டினாள். தக்காரைக் காணும்போது மனம் உருகுதல் இயற்கை. அனுமன் இராமனைக் கண்டு உருகியதை நினைக்க. என்பு எனக்கு உருகுகின்றது என்று அவன் பேசினான். நினைவு - வருத்தம். “நினைவின் அகன்றான்” என்னும் சிந்தாமணிக்கு (339) இனியர் வருத்தத்தின் நின்றும் நீங்கினான் என்று விளக்கினார். நினைவு - ஆலோசனை. அனுமன் ஆலோசித்துப் பேசினான் என்று பிராட்டி கருதியதாகவும் கொள்ளலாம். அனுமன் பேச்சு தற்கொலை கூடாது என்பதை நிரூபிக்கும் சொல்லாகவே உள்ளது. புலன்கள் வெல்வது வீரம் என்பது இந்தியத் தொல் மரபு ஆதலின் அனுமனை வீர என்று விளித்தாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking so, she looked at him closely: "My heart is moved;
  2. his are not the words of deceivers who hold guile within their minds;
  3. he is lamenting in words full of feeling, his tears falling to the ground;
  4. he is fit to be questioned," she judged, and said, "Hero, who are you?"

What the poem says

Cītai studies Aṉumaṉ carefully. Her heart goes out to him; his speech has none of the guile of deceivers, and he weeps as he speaks, which shows his sincerity. So she decides he deserves to be questioned and asks, 'Hero, who are you?'

The commentary notes that it is natural to be moved on meeting a worthy person, just as Aṉumaṉ was moved when he first saw Irāmaṉ. She calls him 'hero' because in Indian tradition mastering the senses is the truest heroism.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉa niṉaittu eyta nōkki, 'iraṅkum eṉ uḷḷam: kaḷḷam
maṉaṉ akattu uṭaiyar āya vañcakar māṟṟam allaṉ:
niṉaivuṭaic coṟkaḷ kaṇṇīr nilam pukap pulampā niṉṟāṉ:
viṉavutaṟku uriyaṉ eṉṉā, 'vīra! nī yāvaṉ? eṉṟāḷ.