கம்பராமாயணம் 5351 · சுந்தர 5.76

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இறைவன் - இராமபிரான்; இளவல் இக்குரல் - தம்பியாகிய இலக்குவன் இக் குரல் ஒலியை; கேளாது ஒழிக என - கேட்காமற் போகட்டும் என்று கருதி; சாப மெய்க் குரல் - தன் வில்லின் மெய்யான ஒலியை; இட்டான் - உண்டாக்கினான்; பின்னை (உம்) - அங்கனம் உண்டாக்கிய பின்னும்; விதியின் வெம்மை - விதியினுடைய விருப்பம்; விளைந்தது - நிறைவேறிற்று; இன்று - இன்றைய தினம் தோன்றிய (அரக்கனின்); பொய்க்குரல் - பொய்யான (மானின்) குரலால்; பின்பு - பின்னர்; பொல்லாப் பொருள் - தீய செயலானது; பயக்கும் என்பான் - நிகழப் போகிறது என்று கருதிய; கைக்குரல் வரி வில்லானும் - கையில் பொருந்திய வில்லேந்திய இராமபிரான்; இளையவன் வரவு - இலக்குவன் வருதலை; கண்டான் - பார்த்தான்.

மாயமான் குரல்கேளாமல் போகட்டும் என்று இராமபிரான் வில் ஒலியை எழுப்பியது முன்பு பேசப்படவில்லை. இங்ஙனம் முன்பு பேசாததைப் பின்பு கூறுவது கவிச்சக்கரவர்த்தியின் இயல்பு. வெம்மை - விருப்பம். “வெம்மை வேண்டல்” என்று தொல்காப்பியம் பேசும். (தொல் உரி 334) வெப்பம் என்றும் கூறலாம். பொய்க்குரல் இன்று - பொய்க்குரல் போல் இல்லை என்றும் கூறப் பெற்றது. பொல்லாப் பொருள் - தீய செயல். ஒரு பொருள் சொல்லுவதுடையேன் (கலி 8)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Let my younger brother not hear this cry," thought the lord, and twanged
  2. the true voice of his bow; yet after that, the cruel will of fate came to pass;
  3. "This false cry today will later bring about some evil thing," thought
  4. he with the striped bow in his hand, and then he saw his younger brother coming.

What the poem says

Aṉumaṉ reveals something the poem did not tell earlier. To drown out the demon's false cry so that Ilakkuvaṉ would not hear it, Irāmaṉ twanged his bowstring. But fate had its way all the same.

Sensing that the deceitful cry would bring disaster, Irāmaṉ then saw Ilakkuvaṉ coming towards him, and knew his fear had come true. The commentary notes that Kampaṉ often reveals details later that he left out when the event happened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ikkural iḷaval kēḷātu oḻika! 'eṉa iṟaivaṉ iṭṭāṉ
meyk kural cāpam: piṉṉai, viḷaintatu vitiyiṉ vemmai:
'poykkural iṉṟu! pollāp poruḷ piṉpu payakkum! 'eṉpāṉ,
kaik kural varivillāṉum, iḷaiyavaṉ varavu kaṇṭāṉ.