கம்பராமாயணம் 5375 · சுந்தர 5.100

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தொழுத கையினன்- கூப்பியகைகளை உடைய அனுமன், விட்டு - இயல்பான நிலை நீங்கி; உயர் தோளினன் - உயர்ந்த தோள்களை உடையவனாய், விசும்பின் மேக்கு - ஆகாயத்துக்கு மேலே; உயர் - உயர்ந்துள்ள; எட்டரு நெடுமுகடு - அணுக முடியாத நீண்ட அண்ட முகடானது; எய்த - தன் பக்கல் வர; நீளுமேல் - தன் மேனி உயருமானால்; முட்டும் - அம் முகடு இடிக்கும்; என்று - என்று கருதி; உருவொடு வளைந்த - திருமேனியுடன் குனிந்த, மூர்த்தியான் - தலையை உடையவனாய்; சுட்டினன் நின்றனன் - தன் வடிவத்தைப் பிராட்டிக்குச் சுட்டிக்காட்டி நின்றான்.

தொழுத கையினன் சுட்டினன் நின்றனன் என்று முடிக்க. முகடு முட்டும் என்று தலை குனிந்து நின்றனன் என்க. மூர்த்தம் என்பது தலை. மூர்த்தத்தை உடையவன் மூர்த்தி. முசலம்... மூர்த்தமேற் படுதலும்... -துஞ்சினன்..... என்னும் சேதுபுராணம் (இலக்கும...21) (உருவொடு வளைந்த) மூர்த்தி - என்பதற்கு வடிவம் உடையவன் என்று பொருள் கூறப் பெற்றது. உரு என்றாலும் வடிவம் என்றுதானே; உருவொடு வளைந்த மூர்த்தி என்பதில் உருவத்தையும் வடிவத்தையும் வேறுபடுத்த வேண்டாமா - ஏற்பின் கொள்ளலாம். வானம் முட்டும் என்று அனுமன் தலையை வளைத்து நிற்பதுதானே இயற்கை. இவ்வுரையை வழங்கியவர் மகாவித்துவான் திரிசிரபுரம் வி. கோவிந்தம் பிள்ளை அவர் நாமம் வாழ்க. (பக்கம் /92) கம்பன் அகராதியும் இவ்வுரையை ஆதரிக்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He pointed to himself; he stood, his hands joined in worship;
  2. his shoulders rose, leaving his former size; reaching the lofty vault
  3. high above the sky that none can reach, "If I grow any taller
  4. I shall strike it," he thought, and bent his head along with his form.

What the poem says

In answer to Cītai's doubt about how so small a creature could cross the sea, Aṉumaṉ, still with joined hands, shows her his true size. He grows until his shoulders tower upward and he reaches the very roof of the universe.

Fearing that if he grew any more his head would strike the vault of the cosmos, he stands with his head bowed. The commentary explains mūrtti here as 'one with a head', following the scholar Kōvintam Piḷḷai, so that the line means he stooped his head.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṭṭiṉaṉ; niṉṟaṉaṉ; toḻuta kaiyiṉaṉ
viṭṭu uyar tōḷiṉaṉ vicumpiṉ mēkku uyar
eṭṭa aru neṭumukaṭu eyti nīḷumēl
muṭṭum eṉṟu uruvoṭu vaḷainta mūrttiyāṉ.