கம்பராமாயணம் 5416 · சுந்தர 6.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயது உண்மையின் - இந்தச்சாபம் இருத்தலினால், நானும் - பிறருடைய உதவியைப் பெறாத யானும்; அறம் வழுவாது என்றும் - தருமம் என்னைக் காப்பதில் பின்னடையாது என்று நினைத்தும்; நாயகன் வலி எண்ணியும் - இராமபிரானின் ஆற்றலை நினைத்தும்; நான் உடைத் தூய்மை காட்டவும் - என்னுடைய தூய்மையை உலகத்துக்கு உணர்த்தவும்; இத்துணை - இத்தனை நாட்கள்; தூங்கினேன் - (இறவாமல்) தாமதித்தேன்; அது அன்றெனில் - அச்சாபம் உண்மை அல்லாமற் போனால்; மன்ற மாய்வென் - நிச்சயமாக இறந்திருப்பேன்.
ஆயது உண்மையினானும் என்று பிரித்து பொருள் சொன்னார் சிலர். நானும் என்பதில் உள்ள உம் மும் அசையானால் வாக்கியம் பிழை நேராது. உம் அசையாக வருதலை சிந்தாமணி 1173 ஆம் பாடல் உணர்த்தும். சாபம் உண்மையாக இருப்பினும் பொய்மையாக இருப்பினும் யான் மாய்வென். ஆனால் இராமபிரானின் வலிமை எண்ணி, என்னுடைய தூய்மையைக் காட்ட இறவாமல் காலதாமதம் செய்தேன் என்ற பொருள் கொள்ள வேண்டும். தருமத்தை நான் காப்பாற்ற வேண்டர, பிராட்டி பேசியதாகப் பொருள் கொள்ள வேண்டும். என்னுடை என்று வரவேண்டியது நானுடை என்று வந்தது. 'நானுடைத் தவத்தால்' என்று திருமங்கையாழ்வாரும், நானுடை எம்பெருமான் என்று சுந்தரரும் பாடினர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because that is true, I too, though otherwise I would have died
- for certain, believing that dharma would never fail,
- and thinking of my lord's strength, and to show the purity
- I possess, have lingered on this long.
What the poem says
Cītai says she would have taken her own life long ago if the curse had not kept her safe. She has held on for three reasons: she trusts that dharma will not fail, she thinks of Irāmaṉ's power, and she wants the world to see her purity proved.
The commentary discusses how to divide the words of the first line and notes a parallel in Tirumaṅkaiyāḻvār's use of the same form.