கம்பராமாயணம் 5421 · சுந்தர 6.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அம்மையே) இராவணனால் - இராவணனாலே; இருளும் - இருண்டு கிடக்கின்ற; இது ஞாலம் - இந்த உலகம் (உன்னால்); தெருளும் - தெளிவு பெறும்; சில்பகல் - சில முகூர்த்த நேரம்; தங்குறின் - யான் தாமதம் செய்தால்; மருளும் - (அதனால்) (யாதாயிற்றோ என்று) மருட்சியடையும்; மன்னற்கு - இராமபிரானுக்கு, யான் சொலும் வாசகம் - யான் கூறவேண்டிய பொன் (பொருள்) பொதிந்த மொழியை; இனி - இப்போது; அருளுவாய் - வழங்குவாயாக, என்று - என்று கூறி (அனுமன்); அடியின் இறைஞ்சினான் - (பிராட்டியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.
இராவணனால் இருண்ட ஞாலம் உன்னால் தெளிவு பெறும். சில்பகல் தங்குதல் பிராட்டிக்கு ஏற்றிக் கூறினர் சிலர். அனுமன், யான் காலதாமதம் செய்தால் பெருமான் மயங்கும் ஆதலின் விரைவில் செல்ல வேண்டும் என்று பிராட்டியிடம் கூறுகின்றான். தங்குதல் என்ற சொல்லுக்கு காலதாமதம் செய்தல் என்று பொருள். தரவு இடை தங்கல் ஓவிலன் (பொருநர் 173) தரல் இடத்துத் தாழ்த்தல் இலன் என்றுமாம், என்னும் சார்புரையை நோக்குக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This world, darkened by Irāvaṇaṉ,
- will grow clear through you; if I now linger even a few days,
- the king will be bewildered; the words I am to tell him,
- grant them to me!' So saying, he bowed at her feet.
What the poem says
Aṉumaṉ accepts Cītai's decision. The world, darkened by Irāvaṇaṉ's misrule, will be set right through her.
He must hurry, though, because if he is late Irāmaṉ will be thrown into anxious confusion. So he bows and asks her for the message he should carry back. The commentary notes that some take 'linger a few days' to refer to Cītai rather than to Aṉumaṉ.