கம்பராமாயணம் 57 · பால 2.37

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பிறை முகம் தலைப் பெட்பின் இரும்பு போழ்
குறை கறித் திரள் குப்பை, பருப்பொடு
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை.
உறைவ, கோட்டம் இல் ஊட்டிடம் தோறெலாம்.

பொருள் · Meaning in Tamil

ஊட்டு இடம்தோ றெலாம் - ஆரவாரம் மிக்கனவும் (வந்தவருக்கு) உணவு வழங்குவனவுமாகிய அறச்சாலைகளிலெல்லாம்; பெட்பின் பிறைமுகத் தலை இரும்பு போழ் - விருப்பத்துடன் பிறை வடிவான தலையை உடைய அரிவாளால் பிளக்கப்பட்டு; குறை நறைக் கறிக் குப்பை - திருத்தப்பட்ட நறுமணமுடைய காய்கறிகளின் குவியலும்; பருப்பொடு நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை - பருப்பு வகைகளும் நிறைந்த வெண்முத்துப் போன்ற அரிசிக் குவியல்களும்; உறைவ - கிடக்கின்றன

பணிசெய்வோர் உணவு நாடி வருவோர் உண்டு மீள்வோர் ஆகிய பல்வேறு கூட்டத்தினரின் ஆரவாரம் அன்ன சத்திரங்களில் பெருகியுள்ளன. இரும்பு இங்கே அரிவாள்மணை. குறை: காய்கறிகளின் அரிந்த துண்டுகள். முத்துக் குவித்தது போல அரிசிக் குவியல்கள்.

ஆரவாரத்தின் மிகுதியும், திருத்திய காய்கறிக் குவியல், அரிசிக் குவியல் ஆகியன சமையற் பணியின் இடையறாமையும் புலப்படுத்துகின்றன. நிறை அரிசிக் குவை, வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை எனப் பிரித்துக் கூட்டிப் பொருள் அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Cut with care by the crescent-headed iron blade,
  2. heaps of fragrant vegetable pieces, with pulses,
  3. and full mounds of rice the colour of white pearls
  4. lie in every bustling feeding house.

What the poem says

The poet visits the charitable feeding houses where food is given to all comers. They are noisy with cooks at work and with crowds of people coming to eat and leaving fed. Everywhere lie heaps of fragrant vegetables chopped on the curved blade of the kitchen cutter, piles of lentils, and mounds of rice as white as pearls, showing that the cooking never stops.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṟai mukat talai, peṭpiṉ irumpu pōḻ
kuṟai naṟaik kaṟik kuppai, paruppoṭu
niṟai veṇ muttiṉ niṟattu aricik kuvai.
uṟaiva, koṭpiṉ ūṭṭiṭam tōṟelām.