கம்பராமாயணம் 5941 · சுந்தர 13.137
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அப்பு உறழ் வேலைகாறும் அலங்கு பேர் இலங்கை தன்னை - நீர்மிக்க கடல் வரை விளங்கும் பெரிய இலங்கை நகரை; எப்புறத்து அளவும்தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் - எல்லாப் பக்கங்களின் எல்லைவரையிலும் எரிந்து போக ஒரு கண நேரத்தில் எரித்த திறமையால்; அம்மூரிபோர்வால் - அனுமனுடைய அந்த வலிய போர்த்திறம் உள்ளவாலானது; துப்பு உறழ் மேனி அண்ணல் - பவழம்போல் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான்; மேருவில் குழைய - மேரு மலையாகிய வில் வளைய; தோளால் - தனது தோள் வலியால்; முப்புரத்து எய்த கோலே ஒத்தது - திரிபுரங்களின் மீது தூண்டிய (திருமாலாகிய) அம்பே போன்றிருந்தது.
அனுமன் வாலுக்கு, முப்புரம் எரித்த அம்பு உவமை ஆயிற்று. 'முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென்னிலங்கையில் ' என்ற பட்டினத்தார் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது. அனுமன், சிவபிரான் அமிசம் என்பது உறுதிப்படுகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through the skill with which it burned in a single instant
- great shining Ilaṅkai to its bounds on every side, as far as the sea's waters,
- that mighty war-tail was like the arrow the lord of coral-red body
- shot with his arms at the triple cities, as the Mēru bow bent.
What the poem says
Aṉumaṉ's tail sets all Ilaṅkai ablaze in an instant, right to the sea. It is like the arrow Civaṉ shot at the three cities, drawing Mount Mēru as his bow.
A later Tamil saint's line runs: the first fire was set to the triple cities, the next to southern Ilaṅkai. The comparison hints at the tradition that Aṉumaṉ is a part of Civaṉ.