கம்பராமாயணம் 5980 · சுந்தர 14.36

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செய் தொடர்க் கன வல்லியும், புரோசையும், சிந்தி,
நொய்தின் இட்ட வன் தறி பறித்து, உடல் எரி நுழைய,
மொய் தடச் செவி நிறுத்தி, வால் முதுகினை முருக்கிக்
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா.

பொருள் · Meaning in Tamil

ஓடை வெம் களிமா- நெற்றிப் பட்டம் அணிந்த கொடிய யானைகள்; உடல் எரி நுழைய - தமது உடலில் நெருப்புப் புகுந்து எரிய; தொடர் செய் கன வல்லியும் - சங்கிலியாகச் செய்யப்பட்ட கனமான பூட்டு விலங்கையும்; புரோசையும் சிந்தி - கழுத்தில் இடப்பட்ட கயிற்றையும் சிதறவிட்டு; இட்ட வல் தறி நொய்தின் பறித்து - தம்மைக் கட்டியிருந்த வலிய தூண்களை எளிதில் பிடுங்கி எறிந்துவிட்டு; மொய் தட செவி நிறுத்தி - வலிய அகன்ற தமது காதுகளை மேலே தூக்கி நிறுத்தி; வால் முதுகினில் முறுக்கி - வாலை முதுகின் மேல் முறுக்கி நீட்டி, கை எடுத்து அழைத்து ஓடின - தமது துதிக்கையைத் தூக்கி, வாய்விட்டுக் கதறிக் கொண்டு பயந்து ஓடின.

தீ பற்றியயானைகளின் செயல்கள் கூறப்பட்டன. தொடர் - சங்கிலி; பலகரணைகள் ஒன்றாகத் தொடுக்கப்பட்டமையால் தொடர் எனப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Scattering the heavy chains made of links and their neck-ropes,
  2. easily tearing up the strong posts they were tied to, as fire entered their bodies,
  3. raising their broad strong ears, curling their tails on their backs,
  4. lifting their trunks and trumpeting, the fierce rutting elephants with forehead plates ran.

What the poem says

The war elephants, their bodies on fire, snap their chains and neck-ropes, uproot their tethering posts and stampede, ears raised, tails curled over their backs, trunks lifted, trumpeting in terror.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cey toṭark kaṉa valliyum, purōcaiyum, cinti,
noytiṉ iṭṭa vaṉ taṟi paṟittu, uṭal eri nuḻaiya,
moy taṭac cevi niṟutti, vāl mutukiṉil muṟukki
kai eṭuttu aḻaittu ōṭiṉa ōṭai veṅ kaḷi mā.