கம்பராமாயணம் 6068 · சுந்தர 15.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்னை ஒப்புபொன் அலது இல்லை - பொன்னை ஒத்திருக்கும் பொருள், பொன்னே அல்லது வேறு ஒன்றும் இல்லை; என - அதுபோல; தன்னை ஒப்பு தன் அலது இல்லை - தன்னை ஒத்திருப்பவள் தான் அல்லது வேறு ஒருத்தியில்லை, என, பொறையில் நின்றாள்- என்ற உலகத்தார் சொல்லும் வண்ணம் பொறுமைக் குணத்தில் தலை சிறந்து நின்றாள்; தனக்கு வந்த நின் அலது நின்னை ஒப்பு இல்லை என நினக்கு நேர்ந்தாள் - தனக்குக் கணவனாக வாய்த்த உன்னை அல்லாமல், உனக்கு ஒத்திருப்பவர் வேறு ஒருவரும் இல்லை என்ற புகழை உனக்குக் கொடுத்தாள்; என்னை ஒப்பு என் அலது இல்லை என, எனக்கும் ஈந்தாள்- என்னை ஒப்பவன் என்னை அல்லது வேறு ஒருவனும் இல்லை என்ற பெருமையை எளியேனாகிய எனக்கும் அளித்துள்ளாள்.
நின்றாள், நேர்ந்தாள், ஈந்தாள் என்ற செயல்களின் மூலம் பிராட்டியின் பெருமையை அனுமன் உணர்த்தினான். பிராட்டியின் பொறுமைக் குணத்துக்கு, பொன் உவமை. பொன், தீயினால் உருக்கப்பட்டும், பின்பு தட்டப்பட்டும், சுடர் விட்டு ஒளிர்வதோடு, பிறர்க்கு அழகு தரும் ஆபரணமாகவும் இருந்து உதவுகிறது. அது போல், பிராட்டி இலங்கைச் சிறையில் துன்புற்றாலும், தானும் கற்புச் சிறப்பு விளங்குவதோடு, இராமபிரான், அனுமன் ஆகியோருக்கும் பெருமை நல்கி உள்ளாள். 'பொறையின் நின்றாள்' என்பதை எழுவாயாகவும் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As only gold is like gold, so in patience she stood:
- none is like her but herself; and to you she gave the name
- that none is like you but you, who came to her as husband;
- and to me as well she gave the name that none is like me but me.
What the poem says
Aṉumaṉ praises Cītai's endurance. As gold has no equal but gold, and like gold shines brighter after fire and beating and becomes an ornament for others, so Cītai, tormented in prison, has become peerless herself and made Irāmaṉ, and even Aṉumaṉ himself, peerless as well.