கம்பராமாயணம் 711 · பால 11.2

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மணி - நவரத்தினங்களும்; அரங்கு - அழுத்திப்பதித்த; அம் நெடுமுடியாய் - அழகிய பொன்முடியையுடைய சனக மன்னனே! பிணி அரங்க - நோய் நீங்கவும்; வினை அகல - (அவற்றிற்குக் காரணமாகிய) தீவினைகள் ஒழியவும், பெருங்காலம் - அநேக ஆண்டுகள்; தவம்பேணி - தவத்தை விருப்பத்தோடு செய்து; மலர் அயனை - தாமரைப் பூவில் தோன்றிய பிரமனை; வழிபட்டு - வணங்கி வழிபட்டு; பணி அரங்கம் - (அவன் அருளால்) ஆதி சேடனாகிய பாம்பின் உடலை; பெரும்பாயல் - பெரிய பள்ளி மெத்தையாக; பரஞ் சுடரை - கொண்டுள்ள ஒளிவடிவமான திருமாலை; யாம்காண - எம்மைப் போன்றவரும் கண்டு உய்யுமாறு; அணி அரங்கம் - அழகிய திருவரங்க விமானத்தோடு; தந்தானை - (சத்திய உலகிலிருந்து பூமிக்கு) கொண்டு வந்த இந்த வம்சத்தவனான இட்சுவாகு மன்னனை; அறியாதார் - அறியாதவர்; அறியாதார் - அறிவில்லாதவரே ஆவர்.

திருவரங்கம்: வைகுண்டம், திருப்பாற்கடல், யோகியரின் உள்ளத் தாமரை என்னும் இவற்றைக் காட்டிலும் திருமால் மனம் உவந்து எழுந்தருளியிருக்கும் இடமாதல் பற்றி இவ் விமானத்திற்கு 'ரங்கம்' (அரங்கம்) எனப் பெயர் அமைந்தது. இட்சுவாகு மன்னன்: வைவச்சுவத மனுவின் மகனாகிய இட்சுவாகு மன்னன் பிரமனை நோக்கிப் பலகாலம் தவம் புரிந்து அவன் அருளால் திருமாலைப் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளச்செய்து பிரதிட்டை செய்து வழிபாடு செய்தான். அந்த அரங்கநாதனே இரவிகுல மன்னவர்க்குக் குலதெய்வமாக விளங்கினான். பரஞ்சுடர் - கதிரவன், சந்திரன், நெருப்பு என்னும் முச்சுடர்களிலும் மேம்பட்ட ஒளியுருவம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'So that sickness might cease and evil deeds depart, he kept up penance for ages,
  2. O you of the tall fine crown set with gems, worshipped Ayaṉ in his flower,
  3. and so that we might see the Supreme Light who lies on the great couch of the serpent's coils,
  4. brought the lovely Araṅkam — those who do not know him know nothing.'

What the poem says

Vicuvāmittiraṉ names Ikṣvāku, son of Maṉu. After long penance and worship of Brahmā, he obtained the shrine of Raṅganātha — Viṣṇu reclining on the serpent Ādiśeṣa — and brought it from Brahmā's world down to Ayōtti, so that people on earth might see the Supreme Light. Raṅganātha became the family deity of the Solar kings.

The commentary explains the name Araṅkam as the place where Viṣṇu delights to dwell, even more than in Vaikuṇṭha, the milk ocean or the hearts of yogis. Anyone ignorant of this king, the sage says, is ignorant indeed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'piṇi araṅka viṉai akalap, peruṅ kālam tavam pēṇi,
maṇi araṅku am neṭu muṭiyāy! malar ayaṉai vaḻipaṭṭup,
paṇi araṅkap perum pāyaṟ parañ cuṭarai yām kāṇa
aṇi araṅkam tantāṉai aṟiyātār aṟiyātār.'