கம்பராமாயணம் 7776 · யுத்த 17.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆற்றலம் என்றிரேல் என்மின் - யாம் பகைவர் முன் சென்று போரிட வல்லமையில்லோம் என்று கூறுவீர்களாயின் அதையும் சொல்லுங்கள்; அவர் தோற்று அலம் வந்து உக - அப்பகைவர் தோற்று வலி கெட்டு வருந்துதல் அடையுமாறு; யான் தொல் நெடுங்கூற்று அலது உயிர் அது குடிக்கும் - நான் பழைய நெடிய இயமன் அல்லாது பிறர் உயிரைக் குடிக்கும் வலிமை உள்ள; கூர்த்த என் வேல்தலை மானுடர் வெரிநில் உகத்துரந்து - கூர்மையான என் வேலின் நுனி மானிடர் இருவரின் முதுகில் வெளிப்படுமாறு செலுத்திக்; காண்பெனால் - காண்பேன்.
அலம் வருதல் - வருந்துதல், உக - வலிமை கெட, தலை - நுனி, வெரிந் - முதுகு, வெரிநில் காண்பெனால் - மார்பில் புகுந்து முதுகு வழி ஊடுருவி வருதல் பற்றி இவ்வாறு கூறினான். ஆற்றலம் - தன்மைப் பன்மை வினை முற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If you say ‘We are not able,’ say so; then I, so that they
- are defeated, suffer and waste away, will drive at them and, my sharp spear
- that drinks life like none but ancient, long-lived Death,
- its point I will see come out of the men's backs.”
What the poem says
Irāvaṇaṉ challenges his ministers: if they admit they are unable to fight, let them say so. Then he will go himself, and drive his sharp spear, a drinker of lives second only to Yama, through the chests of the two men until its point comes out of their backs.