கம்பராமாயணம் 7784 · யுத்த 17.13

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ”
பாட வேறுபாடு · Project Madurai reads
1“‘சேனைக் கடலோடு இடை செல்க ” எனினும்
யான் ‘இப்பொழுதே தனி ஏக ‘எனினும்
தான் ஒத்தது சொல்லுதி; தா விடை ‘என்-
றான்; இத்திறம் உன்னி அரக்கர்பிரான்.

பொருள் · Meaning in Tamil

சேனைக் கடலோடு இடை செல்க எனினும் - படைக் கடல் சூழ இடையில் (போருக்குக்) செல்க என்று கட்டளை இட்டாலும் தனி ஏகு எனினும் - அவ்வாறன்றித் தனியாகவே (போருக்குச்) செல் என்று கட்டளை இட்டாலும்; யான் இப்பொழுதே - நான் இக்கணத்தே (அதுசெய்வேன்); தான் ஒத்தது சொல்லுதி - இரண்டனுள் பொருத்தமானதைச் சொல்வாய்; விடை தா என்றான் - விடை தருக (என்று அதிகாயன்) கூறினான்; இத்திறம் உன்னி அரக்கர் பிரான் - இவ்வாறு தன் மகன் கூறிய தன்மையை எண்ணி அரக்கர் தலைவனாகிய இராவணன் ஏவினனால் (15) என்பதோடு முடியும்.

தான் - அசை சேனைக்கடல் - உருவகம், செல்க - வியங்கோள் வினைமுற்று. தா - தாவென் கிளவி ஒப்போன் கூற்று. மகன் தந்தையிடம் ஒப்போனாகப் பேசுவதால் இச்சொல் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Whether you say, ‘Go into the midst with a sea of troops’,
  2. or ‘Go alone, this very moment’, I
  3. will do it; say which you think fit; give me leave,” so he
  4. said; and thinking on this, the lord of the demons —

What the poem says

Atikāyaṉ leaves the choice to his father: he will go at once, either at the head of a sea of troops or alone, whichever Irāvaṇaṉ thinks best. He asks only for permission to leave. Irāvaṇaṉ weighs his son's words; the sentence runs on to the next verses, where he gives his orders.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘cēṉaik kaṭalōṭu iṭai celka ” eṉiṉum
yāṉ ‘ippoḻutē taṉi ēku ‘eṉiṉum
tāṉ ottatu colluti; tā viṭai ‘eṉ-
ṟāṉ; it tiṟam uṉṉi arakkar pirāṉ.