கம்பராமாயணம் 7786 · யுத்த 17.15

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'போவாய் இதுபோது பொலங் கழலோய்!
மூவாயிர கோடியரோடு முரண்
கா ஆர் கரி தேர் பரி காவலின் நின்று
ஏவாதன யாவையும் ஏவினனால்.

பொருள் · Meaning in Tamil

பொலங்கழலோய் - பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல் அணிந்தவனே; முரண் மூவாயிர கோடியரோடு - வலிமை உள்ள மூவாயிரங்கோடி காலாட்படை, கா ஆர் கரி - காத்தலைப் பொருந்திய யானைப்படை; தேர் - தேர்ப்படை; பரி - குதிரைப் படை, காவலின் போவாய் இது போது - (ஆகியவை) காவல் செய்யப் (போர்க்களம்) போவாய் இப்போது; என்று ஏவாதன யாவையும் ஏவினனால் - என்று கூறி (இதுவரை போருக்கு அனுப்பாத பெரும் படையை (அதிகாயனுடன் செல்க என) ஏவினான்.

முரண் - வலிமை, கா - காத்தல், ஆர் - பொருந்திய, பரி - குதிரை, பொலங்கழல் - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை, கா - முதனிலைத் தொழிற் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Go now, you who wear golden anklets!
  2. With three thousand crores of mighty foot-soldiers,
  3. guarding elephants, chariots and horses, as your escort,” so saying,
  4. he sent forth all the forces he had never yet sent out.

What the poem says

Irāvaṇaṉ sends Atikāyaṉ off at once. He gives him an enormous escort: three thousand crores of strong infantry with elephants, chariots and cavalry. This is a reserve force that had not yet been committed to the war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōvāy itupōtu polaṅ kaḻalōy!
mūvāyira kōṭiyarōṭu muraṇ
kā ār kari tēr pari kāvaliṉ eṉṟu
ēvātaṉa yāvaiyum ēviṉaṉāl.