கம்பராமாயணம் 896 · பால 14.10

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உய்க்கும் வாசிகள் - தாம் ஏறிச்செலுத்தும் குதிரைகளினின்று; இழிந்து - இறங்கி; இள அன்னத்தின் - இள அன்னங்கள் போல; ஒதுங்கி - மெல்ல நடந்து; தொக்க மெல் மரம் - அடர்ந்த இளமரங்களின்; நிழல்படத் துவன்றிய - நிழல் படுமாறு அமைந்த; சூழல் புக்க - பொழிலிடத்தில் போய்ச் சேர்ந்த; மங்கையர் - மகளிர்; மெய் - (தம்) மேனிகளில்; கலாபமும் - இடையணிகளும்; குழைகளும் - காதணிகளும்; இழைகளும் - பிற அணிகலன்களும்; விளங்க - விளங்குவதனால்; பூத்த கொம்பு ஆம் என - மலர்கள் பூத்துள்ள கொம்புகள் என்னும்படி; பொலிந்தார் - திகழ்ந்தார்கள்.

இளமரமாதலின் அதன் அடியில் நின்ற மகளிர் அணிந்த அணிகலன்களின் பொலிவால் அம் மரத்தின் கீழே படியும் பூங்கொம்பு போலத் தோன்றினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Getting down from the horses they rode, stepping softly aside like young swans,
  2. with the girdles, earrings and jewels on their bodies gleaming,
  3. the women who entered the grove where the shade of close-growing tender trees lay thick
  4. shone like boughs in full flower.

What the poem says

The women who rode on horseback dismount and walk gracefully, like young swans, into a shady grove of young trees. Standing under the trees and glittering with their jewels, they look like the trees' own flowering branches bending low.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uykkum vācikaḷ iḻintu, iḷa aṉṉattiṉ otuṅki,
meyk kalāpamum kuḻaikaḷum iḻaikaḷum viḷaṅkat,
tokka meṉ mara niḻal paṭat tuvaṉṟiya cūḻal
pukka maṅkaiyar, pūtta kompu ām eṉap polintār.