கம்பராமாயணம் 971 · பால 15.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அம்புயத்து அணங்கின் அன்னார் - தாமரை மலரில் வாழும் திருமகளைப் போன்ற (அழகிய) அம்மகளிரின்; அம்மலர்க்கைகள் தீண்ட - அழகிய அம் மலர் அனைய கரங்கள் தீண்டியவுடன்; வம்பியல் அலங்கல் பங்கி - மணம் பொருந்திய மாலைகளையணிந்த மயிர்முடியினையும்; வாள் அரி மருளும் கோளார்தம் - வாள் போன்று பாயும் கொடுமையினையுடைய சிங்கங்களும் அஞ்சும் வலிமையினையும் உடைய ஆடவர்கள் தம்முடைய; புய வரைகள் வந்து தாழ்வன - மலையனைய தோள்கள் அம்மகளிரின் முன் வந்து தாழ்ந்து வணங்கி நிற்பன (என்றால்); தளிர்த்த மென்பூங்கொம்புகள் - (மெல்லிய) தளிர்களையும் மெல்லிய பூக்களையும் உடைய பூங்கொடிகள்; தாழும் என்றல் - அம் மகளிர் தீண்டியவுடன் தாழ்கின்றன என்பது; கூறலாம் தகைமைத்து ஆமோ? - சிறப்பாக எடுத்துக் கூறத்தக்கதோ?
'மலர்க்கைகள் தீண்டப் புய வரைகள் தாழ்வன' என்று, மலர்களின் முன் மலைகள் வீழ்ந்து கிடக்கும் வியப்புக் கண்டு கூறியவாறு. மேற் பாடலில் மகளிர்க்கு அஃறிணைகளே வணங்குகின்றன; உயர்திணைகளைப்பற்றிக் கூறவேண்டுமோ என்றவர் இப்பாடலில் உயர்திணைகளே வணங்குகையில் அஃறிணைகளைப்பற்றிக் கூற வேண்டுமோ என மாற்றிக் கூறிச் சுவையூட்டினார். ஆகவே, இருதிணை யுயிர்களும் மகளிரை வணங்கும் என்பது தெளிவாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the lovely flower-hands of women like the goddess of the lotus touch them,
- the mountain-shoulders of mighty men, with fragrant garlands in their hair,
- whose strength bewilders even fierce lions, come down and bow;
- so is it worth saying that soft, budding, flowering boughs bow down?
What the poem says
This verse turns the previous one around. There the poet argued that if plants bow to the women, men surely will. Here he says that since strong men, whose mountain-like shoulders frighten even lions, bow down at a touch of the women's flower-soft hands, there is nothing remarkable in branches doing the same.
The image is of mountains falling before flowers. Between the two verses, both people and things are shown to bow before these women.