கம்பராமாயணம் 973 · பால 15.10

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உலம் தரு வயிரம் திண் தோள், ஒழுகி வாள் ஒளி கொள் மேனி,
மலர்ந்த பூம் தொடையல் மாலை, மைந்தர்பால், மயிலின் அன்னார்
கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன, சில கை வாராப்,
புலந்தவர் போல நின்று, வளைகில பூத்த கொம்பர்.

பொருள் · Meaning in Tamil

உலம் தரு வயிரத் திண்தோள் - திரண்ட கல்லைப் போன்ற உறுதி வாய்ந்த திண்ணிய தோள்கள்; ஒழுகிவார் ஒளிகொள் மேனி - ஒழுங்குற அமைந்து, மிக்க ஒளி கொண்டமைந்த உடலையும்; மலர்ந்த பூந்தொடையல் மாலை - மலர்ந்த மலர்களால் தொடுக்கப் பட்ட மாலைகளையும்; மைந்தர் பால் - (உடைய) ஆடவரிடத்தில்; கலந்தவர் - கலந்தவரான; மயிலின் அன்னார் - மயில் அனைய மகளிர்; போல - போன்று; பூத்த கொம்பர் சில - மலர்ந்த மலர் கொடிகள் சில; ஒல்கி ஒசிந்தன - தளர்ந்து துவண்டு கிடந்தன (சில); கைவாராப் புலந்தவர் போல - சில பூங்கொடிகள் கைக்கெட்டாதன வாய் ஊடல் கொண்ட மகளிர் போல்; நின்று வளைகில - நின்றவாய் வளையாமல் இருந்தன.

கலந்த மகளிர் துவண்டு கிடப்பதை “அவச நிலை” என்பர் இன்பநூலார். “கலவிக் களியின் மயக்கம்” (கலிங். கடை. 14) என்பார் சயங்கொண்டார். உவமையணி. ஊடலில் நிமிர்வதும் கூடலில் குழைவதும் பெண்டிர் இயல்பு. பூங்கொடிகளாகிய அஃறிணை மேல் ஏற்றி உயர்திணை மகளிர் செயலை விளக்கியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like peacock-like women who have united with young men
  2. of mighty shoulders hard as diamond, of bodies flowing with radiance, wearing garlands of open flowers,
  3. some flowering boughs drooped and bent limply; others, out of reach,
  4. stood like women sulking in a quarrel, and would not bend.

What the poem says

When the women reach for the flowering branches, some branches bend down limply, like women who have just made love and lie languid in their husbands' arms. Others stay out of reach and refuse to bend, like women stiff and sulking after a lovers' quarrel.

Bending in love and stiffening in a quarrel are, the poet suggests, both natural to women, and he reads them into the plants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulamtaru vayirat tiṇ tōḷ, oḻuki vār oḷi koḷ mēṉi,
malarnta pūn toṭaiyal mālai, maintarpāl, mayiliṉ aṉṉār
kalantavar pōla olki ocintaṉa, cila kai vārāp,
pulantavar pōla niṉṟu, vaḷaikila pūtta kompar.