| 1 | ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் | |
| 2 | நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் | |
| 3 | மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் | |
| 4 | குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் | |
| 5 | வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் | |
| 6 | வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் | |
| 7 | கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் | |
| 8 | சேராத இடம் தனிலே சேர வேண்டாம் | |
| 9 | மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம் | |
| 10 | மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம் | |
| 11 | அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் | |
| 12 | கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம் | |
| 13 | ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி | |