தொல்காப்பியம் 11 · எழுத்து 1.11
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தனிமெய் எழுத்தின் அளவு அரை மாத்திரை என்று கூறுவர்.
இளம்பூரணர்
இளம்பூரணர் தனிமெய்யின் அளவு அரை மாத்திரை என நேர்பொருளாகக் கொள்வார்.
நச்சினார்க்கினியர்
மெய்யைத் தனித்து ஒலித்துக் காட்டுவது அரிது; காக்கை, கோங்கு, கவ்வை போன்ற சொற்களில் வைத்தே அதன் அளவைக் காட்டுவர் என்று விளக்குகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The measure of a consonant is half, they say.
What the poem says
A pure consonant (one written with the dot, as in k) lasts half a unit.
Nacciṉārkkiṉiyar notes that this half unit cannot be shown on its own, since a consonant is hard to pronounce alone; it is demonstrated by placing it in words such as kākkai "crow", kōṅku (a tree) and kavvai "rumour".
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது தனிமெய்க்கு அளவு கூறுகின்றது.
இ - ள் : மெய்யின் அளவே அரையென மொழிப—மெய்யினது மாத்திரையினை ஓரோவொன்று அரைமாத்திரையுடையவென்று கூறுவர் புலவர்; எ - று.
அவ்வரைமாத்திரையுந் தனித்துக் கூறிக் காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயருந் தன்மையாய் நிற்றலின். இனி அதனைச் சில மொழிமேற் பெய்து காக்கை கோங்கு கவ்வை யெனக் காட்டுப. மெய்யென்பது அஃறிணையியற் பெயராதலின் மெய்யென்றும் ஒற்றுமை பற்றி அரையென்றார்.