தொல்காப்பியம் 1108 · பொருள் 4.23

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 1

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

தலைவனின் விளையாட்டும் அலரைப் போலவே காமத்தை மிகுவிக்கும் தன்மையுடையது.

இளம்பூரணர்

"ஆங்கு" என்பதை அசைச்சொல் எனக் கொண்டு, விளையாட்டால் தலைவி உறங்காமை முதலிய காம மிகுதியைக் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

விளையாட்டு என்பதைப் பரத்தையர் சேரியில் ஆடல் பாடல் யாறாடுதல் எனக் கொண்டு, அதனால் பரத்தையருக்கும் தலைவிக்கும் காமம் சிறக்கும் என விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hero's play, too, is of that kind there.

What the poem says

Like gossip, the hero's vilaiyāṭṭu, "play, pleasure-outings", heightens love. Iḷampūraṇar reads āṅku as an expletive: the hero's play shows the excess of love, and cites a Kalittokai passage in which the wife lies sleepless while he sports.

Nacciṉārkkiṉiyar takes the play as the hero's dancing, singing and bathing with the courtesans in their quarter, and āṅkum as "there too", with the courtesans: when many come to know of it, the courtesans' love grows as they fear his leaving, and the wife's sulking grows as she hears the talk. So both sides feel the heightening of love. He cites Akanāṉūṟu 116 and 166.

உரை · Commentary

இளம்பூரணர்

இதுவும் அது.

(இ·ள்.) கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதியைக் காட்டும் என்றவாறு.

ஆங்கு—அசை.

“அகலநீ துறத்தலின் அழுதோவா உண்கணெம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால் நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் தமர்பாடுந் துணங்கையுள் அரவம்வந் தெடுப்புமே” (கலித். ௭௰)

எனவரும்.

விளையாட்டாற் காமமிக்கு உறங்காமை கண்டுகொள்க.

நச்சினார்க்கினியர்

இதுவுங் காமச்சிறப்பே கூறுகின்றது.

(இ - ள்.) கிழவோன் விளையாட்டு—தலைவன் பரத்தையர் சேரியுள் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டும் அவருடன் யாறு முதலியன ஆடியும் இன்பம் நுகரும் விளையாட்டின் கண்ணும், ஆங்கும் அற்று—அப் பரத்தையரிடத்தும் அலரால் தோன்றுங் காமச் சிறப்பு (எ - று.)

‘ஆங்கும்’ என்ற உம்மையான் ஈங்கும் அற்றெனக் கொள்க. தம்மொடு தலைவன் ஆடியது பலரறியாதவழி யென்றுமாம். பல ரறிந்தவழி அவனது பிரிவு தமக்கு இழிவெனப்படுதலின் அவர் காமச்சிறப்புடையராம். தலைவன் அவரொடு விளையாடி அலர் கேட்குந்தோறுந் தலைவிக்குப் புலத்தலும் ஊடலும் பிறந்து காமச் சிறப்பெய்தும். ஆங்கும் ஈங்குமெனவே அவ்விருவரிடத்துந் தலைவன் அவை நிகழ்த்தினானாகலின் அவற்குங் காமச்சிறப்பு ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று. இது காமக்கிழத்தியரல்லாத பரத்தையரொடு விளையாடிய பகுதியாகலின் வேறு கூறினார். காமக்கிழத்தியர் ஊடலும் விளையாடலுந் தலைவி ஊடலும் விளையாடலும் ‘யாறுங் குளனும்’ (தொல். பொ. 191) என்புழிக் கூறுப அஃது அலரெனப்படாமையின் விளையாட்டுக்கண்ணென விரித்த உருபு வினைசெய்யிடத்து வந்தது.

“எஃகுடை எழினலத் தொருத்தியொடு நெருநை வைகுபுனல் அயர்ந்தனை யென்ப அதுவே பொய்புறம் பொதிந்தயான் கரப்பவுங் கையிகந் தலரா கின்றால் தானே” (அகம். 116)

எனவும்,

“கோடுதோய் மலிர்நிறை ஆடி யோரே” (அகம். 166)

எனத் தலைவியும் பரத்தையும் பிறர் அலர்கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க. ஆண்டுப் பணிந்து கூறுங்காலும் விளையாடுங்காலுந் தலைவன் காமச் சிறப்புக் காண்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiḻavōṉ viḷaiyāṭṭu āṅkum aṟṟē.