தொல்காப்பியம் 113 · எழுத்து 4.10
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
வேற்றுமைப் பொருளில் புணரும் சொற்களும், வேற்றுமை அல்லாத வழியில் (அல்வழியில்) புணரும் சொற்களும், புணரும்போது எழுத்து மிகுதல், சாரியை மிகுதல் என்னும் இரண்டு பண்புகளையும் பெறும் ஆற்றல் உடையன. விளங்கோடு என்பதில் எழுத்து மிகுந்தது; மகவின் கை என்பதில் இன் என்னும் சாரியை வந்தது.
இளம்பூரணர்
இளம்பூரணர் வேற்றுமைப் புணர்ச்சியிலும் அல்வழிப் புணர்ச்சியிலும் எழுத்துப் பேறும் சாரியைப் பேறும் நிகழும் என நேர்பொருள் கொள்வார்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
அல்வழியில் விளக்குறிது என்பதில் எழுத்தும், பனையின் குறை என்பதில் சாரியையும் வந்தன என்றும், அவற்றுக்கோடு, கலத்துக் குறை என இரண்டும் சேர்ந்து வருதலும் உண்டு என்றும் விளக்குகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The state of words joined with a case sense
- and the state of words joined in the non-case way
- are able to carry the two features, letter and empty increment,
- when they join.
What the poem says
Joins fall into two great classes: vēṟṟumai "case" joins, where the first word stands in a case relation to the second (often with the case suffix dropped), and alvaḻi "non-case" joins, everything else. In both, the join may be filled out by an extra letter or by a cāriyai, an "empty increment" syllable with no meaning of its own.
Nacciṉārkkiṉiyar's examples: viḷaṅkōṭu "wood-apple branch" adds a letter (a case join); makaviṉ kai "the child's hand" adds the increment iṉ. In non-case joins viḷakkuṟitu "the wood-apple is small" adds a letter, while paṉaiyiṉ kuṟai "less than a paṉai" (a measure) adds iṉ. "Able to carry" lets both appear together, as in avaṟṟukkōṭu and kalattukkuṟai. He lists what counts as non-case: the nominative and vocative with their predicates, finite verbs and participles with what they govern, and compounds other than case compounds.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது மூவகைத்திரிபினுள் மிக்குப் புணரும் புணர்ச்சி இருவகைய என்கின்றது.
இ-ள்: புணருங்காலை — நால்வகைப் புணர்ச்சியுள் மிக்க புணர்ச்சி புணருங் காலத்து, வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் — வேற்றுமைப் பொருண்மையினைக் குறித்த புணர் மொழியினது தன்மையும், வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும் — வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புணரும் மொழியினது தன்மையும், எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் ஒழுக்கல் வலிய — எழுத்து மிகுதலுஞ் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டு குணத்தினாலுஞ் செல்லுதலைத் தமக்கு வலியாக வுடைய; எ-று.
எனவே, ஏனைப் புணர்ச்சிகளுக்கு இத்துணை வேறுபாடு இன்றென உணர்க.
எ-டு: விளங்கோடு, இஃது எழுத்துப் பெற்றது. மகவின் கை, இது சாரியை பெற்றது. இனி அல்வழிக்கண் விளக்குறிது, இஃது எழுத்துப் பெற்றது. பனையின் குறை, இது சாரியை பெற்றது. இதற்குப் பனை குறைந்த தென்பது பொருளாம். இஃது அளவுப் பெயர். ஒழுக்கல் வலிய என்றதனான் இக் கூறிய இரண்டும் எழுத்துஞ் சாரியையும் உடன் பெறுதலுங் கொள்க. அவற்றுக் கோடென்பது வேற்றுமைக்கண் இரண்டும் பெற்றது. கலத்துக் குறையென்பது அல்வழிக்கண் இரண்டும் பெற்றது. இதற்குக் கலங் குறைந்ததென்பது பொருளாம். இயல்பு கணத்துக்கண் இவ்விரண்டும் உடன்பெறுதலின்று. அல்வழி முற்கூறாதது வேற்றுமையல்லாதது அல்வழி யென வேண்டுதலின். எழுத்துப் பேறு யாப்புடைமையானும் எழுத்தினாற் சாரியையாதலானும் எழுத்து முற்கூறினார். வேற்றுமை மேலைச் சூத்திரத்தே கூறுகின்றார்.
அல்வழியாவன அவ்வுருபுகள் தொக்கும் விரிந்தும் நில்லாது புணர்வன. அவை எழுவாய் வேற்றுமை ஆறு பயனிலையோடும் புணர்ந்த புணர்ச்சியும், விளிவேற்றுமை தன் பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும், முற்றுப் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், பெயரெச்சமும் வினையெச்சமும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், உவமத் தொகையும் உம்மைத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புத் தொகையும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரோடும் வினையோடும் புணர்ந்த புணர்ச்சியும், அன்மொழித் தொகை பொருளோடு புணர்ந்த புணர்ச்சியும், பண்புத்தொகையும் வினைத்தொகையும் விரிந்துநின்றவழிப் புணர்ந்த புணர்ச்சியுமென உணர்க.