தொல்காப்பியம் 125 · எழுத்து 4.22
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
நாள்மீன் பெயர்களின் முன், வல்லெழுத்தை முதலாக உடைய வினைச்சொல் வரும்போது, இடையே வரும் ஆன் சாரியையின் னகரமும் நான்காம் உருபின் முன் போலவே றகரமாகத் திரியும். பரணியாற் கொண்டான் என்பது எடுத்துக்காட்டு.
இளம்பூரணர்
இளம்பூரணர் நாள்மீன் பெயர்களின் முன் வல்லெழுத்தில் தொடங்கும் வினை வரும்போது ஆன் சாரியையின் னகரமும் றகரமாகத் திரியும் என நேர்பொருள் கொள்வார்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
உம்மையால் இன் சாரியையின் னகரமும் இவ்வாறு திரியும் என்று கொள்கிறார்: பனியிற் கொண்டான். பெயர் வரும்போது திரிதலும் திரியாமையும் உண்டு என்கிறார்: குறும்பிற் கொற்றன், குருகின் கால்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The letter n of āṉ, too, is like that
- for a verb beginning with a hard letter that comes after a day-name.
What the poem says
After the name of a lunar day (asterism), when a verb beginning with a hard consonant follows, the increment āṉ also changes its ṉ to ṟ, just as before the dative. Nacciṉārkkiṉiyar's example: paraṇiyāṟ koṇṭāṉ "he took it on Paraṇi day", and so with ceṉṟāṉ, tantāṉ, pōyiṉāṉ.
Taking the "too" (um) broadly, he extends the change to iṉ before such verbs after other nouns as well: paṉiyiṟ koṇṭāṉ "he took it in the dew", vaḷiyiṟ koṇṭāṉ. With nouns it is optional: kuṟumpiṟ koṟṟaṉ but kurukiṉ kāl.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இஃது ஆனின் ஈறு பொருட்புணர்ச்சிக்கண் திரியு மென்கின்றது.
இ-ள்: நாள்முன் வரூஉம் வன்முதல் தொழிற்கு — நாட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக உடைய தொழிற்சொற்கு இடையே வரும், ஆனின் னகரமும் அதனோரற்று — ஆன் சாரியையின் னகரமும் நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியை போல ரகரமாய்த் திரியும்; எ-று.
எ-டு: பரணியாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான். எனவரும். ‘நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்கு’ (எழு-௨௪௭) என்றதனான் ஆன்சாரியை கொடுத்துச் செய்கை செய்க. இனி உம்மையை இறந்தது தழீஇயதாக்கி நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற் றொழிற்கண் இன்னின் னகரமும் அதனோடு ஒக்குமெனப் பொருளுரைத்துப் பனியிற் கொண்டான் வளியிற் கொண்டான் என இன்னின் னகரமும் றகரமாதல் கொள்க.
இனி, ஞாபகத்தால் தொழிற்கண் இன்னின் னகரந் திரியு மெனவே பெயர்க்கண் இன்னின் னகரந் திரிதலுந் திரியாமையுங் கொள்க. குறும்பிற் கொற்றன், பறம்பிற் பாரி எனத் திரிந்து வந்தன; குருகின் கால், எருத்தின் புறம் எனத் திரியாது வந்தன.