தொல்காப்பியம் 15 · எழுத்து 1.15

Section எழுத்ததிகாரம் / 1. நூல் மரபுPoet தொல்காப்பியர்Lines 1

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

தனிமெய் எழுத்தின் இயல்பு புள்ளி பெற்று நிற்றல். க், ங், ற், ன் என்பவை எடுத்துக்காட்டு. உயிர்மெய்க்குப் புள்ளி இல்லை.

இளம்பூரணர்

இளம்பூரணர் தனிமெய் புள்ளி பெற்று நிற்றலே அதன் இயல்பு என நேர்பொருள் கொள்வார்.

நச்சினார்க்கினியர்

மெய் முதலில் அகரத்தோடு கூடிய வடிவில் எழுதப்பட்டு, அந்த அகரம் நீங்கியதைப் புள்ளி காட்டுகிறது என்றும், வேறு உயிர் ஏறும்போது புள்ளி நீங்கும் என்றும் விளக்குகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The nature of a consonant is to stand with a dot.

What the poem says

A pure consonant is written with a dot (puḷḷi) above it, as in k, ṅ, ṟ, ṉ written alone. A vowel-consonant has no dot.

Nacciṉārkkiṉiyar reads more into the rule: the consonant is first written in the shape it has with a, and the dot then marks the a as removed; when another vowel comes, the dot goes and the shape changes. He links this to the later rule that consonants are pronounced with the help of a.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இது தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் ஒப்புமைமேல் வேற்றுமை செய்தல் கூறுகின்றது. என்னை? உயிர்மெய்யான ககர ஙகரங்கட்குந் தனி மெய்யான ககர ஙகரங்கட்கும் வடிவு ஒன்றாக எழுதியவற்றை ஒற்றாக்குதற்குப் பின்பு புள்ளி பெறுக என்றலின்.

இ - ள் : மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்—பதினெட்டு மெய்களின் தன்மையானது புள்ளிபெற்று நிற்றலாம்; எ - று.

எனவே உயிர்மெய்கட்குப் புள்ளியின்றாயிற்று. க்-ங்-ற்-ன் என வரும். இவற்றைப் புள்ளியிட்டுக் காட்டவே புள்ளி பெறுவதற்கு முன்னர் அகரம் உடனின்றதோர் மெய்வடிவே பெற்று நின்றனவற்றைப் பின்னர் அப்புள்ளியிட்டுத் தனிமெய் யாக்கினரென்பதூஉம் பெறுதும். இதனாலே ககரம் ஙகரம் முதலியன புள்ளி பெறுவதற்கு முன்னர் இயல்பாக அகரம் பெற்றே நிற்கும் என்பதூஉம் புள்ளி பெறுங் காலத்து அவ்வகரம் நீங்கும் என்பதூஉம் பின்னர் அப்புள்ளி நீங்கி உயிரேறுமிடத்துத் தன்கண் அகரம் நீங்கியே போக வருகின்றதோர் உயிர் யாதானும் ஒன்று ஏறி நிற்கும் என்பதூஉம் பெற்றாம். ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ (எழு-௪௬) என்னுஞ் சூத்திரத்தானும் இதுவே இதற்குக் கருத்தாதல் உணர்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1meyyiṉ iyaṟkai puḷḷiyoṭu nilaiyal.