தொல்காப்பியம் 154 · எழுத்து 5.11
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
உயிரில் முடியும் உயர்திணைப் பெயர்களும், மெய்யில் முடியும் உயர்திணைப் பெயர்களும், வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர் என்னும் நான்கு வகை வருமொழியோடும், வேற்றுமை அல்வழி என்னும் இரண்டு இடத்திலும், இயல்பாகவே புணரும் என்று புலவர் கூறுவர். நம்பி குறியன், நங்கை சிறியள், நம்பி கை என வரும்.
இளம்பூரணர்
இளம்பூரணர் உயிரீற்று உயர்திணைப் பெயர்களும் புள்ளியீற்று உயர்திணைப் பெயர்களும் எல்லா இடத்தும் இயல்பாகப் புணரும் என நேர்பொருள் கொள்வார். நச்சினார்க்கினியர் மறுக்கும் மாற்று விளக்கம் யாருடையது என்பது இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
வல்லினம் அல்லாதவற்றுக்கு மட்டும் இது பொருந்தும் என்று சிலர் கொள்வது பொருந்தாது என்று மறுக்கிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- High-class nouns ending in a vowel
- and high-class nouns with a dotted ending
- are natural in every way, they say.
What the poem says
Nouns of the high class, uyartiṇai (persons), whether they end in a vowel or a consonant, do not change in joining, before any of the four groups of initial letters, in case as well as non-case relations. Nacciṉārkkiṉiyar's examples: nampi kuṟiyaṉ "Nampi is short", naṅkai ciṟiyaḷ, avaṉ tīyaṉ, avaḷ periyaḷ; in case relation, nampi kai, naṅkai cevi, ñāṉṟāṉ nīṇṭāṉ.
He criticises others who would apply this rule only to the non-hard groups, saying it covers all four. Using the generality of the wording, he also gathers exceptions, such as names in -ṉ that drop the ṉ (kapilaparaṇar) and plural forms like pallaracar.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இஃது உயர்திணைப்பெயர் வன்கணம் மென்கணம் இடைக்கணம் உயிர்க்கண மென்னும் நான்கு கணத்தினும் இருவழியும் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: உயிரீறாகிய உயர்திணைப் பெயரும்—உயிரீறாய் வந்த உயர்திணைப் பெயர்களும், புள்ளியிறுதி உயர்திணைப் பெயரும்—புள்ளியீற்றினையுடைய உயர்திணைப் பெயர்களும், எல்லாவழியும்—நான்கு கணத்து அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா இடத்தும், இயல்பென மொழிப—இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர்; எ-று.
வன்கணம் ஒழிந்த கணங்களை ‘ஞநமயவ’ (எழு-௧௪௪) என்பதனான் முடிப்பாரும் உளர். அது பொருந்தாது, இவ்வாசிரியர் உயர்திணைப் பெயரும் விரவுப் பெயரும் எடுத்தோதியே முடிப்பாராதலின்.
எ-டு: நம்பி அவன் எனவும்; நங்கை அவள் எனவும் நிறுத்தி, அல்வழிக்கட் குறியன் சிறியன் தீயன் பெரியன் எனவும்; குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும்; ஞான்றான் நீண்டான் மாண்டான் எனவும்; ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் எனவும்; யாவன் வலியன் எனவும், யாவள் வலியள் எனவும்; அடைந்தான் ஆயினான் ஔவியத்தான் எனவும்; அழகியள் ஆடினாள் ஔவியத்தாள் எனவும் ஒட்டுக. இனி வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் எனவும்; ஞாற்சி நீட்சி மாட்சி எனவும், யாப்பு வன்மை எனவும், அழகு ஔவியம் எனவும் எல்லாவற்றோடும் ஒட்டுக. ஒருவேன் எனத் தன்மைப் பெயர்க்கண்ணுங் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் எனவும், கை செவி தலை புறம் எனவும் ஒட்டுக. நீ முன்னிலை விரவுப் பெயராதலின் ஈண்டைக்காகா.
இனி, உயிரீறு புள்ளியிறுதி என்ற மிகையானே உயர்திணைப் பெயர் திரிந்து முடிவனவுங் கொள்க. கபிலபரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவமாணிக்கர் என னகர ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தன. ஆசீவகப்பள்ளி நிக்கந்தக்கோட்டம் என இவை அவ் வீறு கெட்டு ஒற்று மிக்கு முடிந்தன. ஈழவக்கத்தி வாணிகத்தெரு அரசக்கன்னி கோலிகக்கருவி என இவை ஒருமை யீறும் பன்மை யீறுங் கெட்டு மிக்கு முடிந்தன. குமரகோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக்கோட்டம் என இவை ஈறு கெட்டு வல்லெழுத்து உறழ்ந்தன. வண்ணாரப் பெண்டிர், இது மிக்கு முடிந்தது. பல்சங்கத்தார் பல்சான்றோர் பல்லரசர் என்றாற் போல்வன ரகரவீறும் அதன் முன்னின்ற அகரமுங் கெட்டுப் பிற செய்கைகளும் பெற்று முடிந்தன.
இனி, எல்லாவழியு மென்றதனான் உயர்திணை வினைச்சொல் இயல்பாயுந் திரிந்தும் முடிவன எல்லாங் கொள்க. உண்கு உண்டு வருது சேறு உண்பல் உண்டேன் உண்பேன் என்னுந் தன்மை வினைகளைக் கொற்றா சாத்தா தேவா பூதா என்பனவற்றோடு ஒட்டுக. உண்டீர் சான்றீர் பார்ப்பீர் என முன்னிலைக்கண்ணும் உண்ப உண்டார் சான்றார் பார்ப்பார் எனப் படர்க்கைக்கண்ணும் ஒட்டுக. இவை இயல்பு. உண்டனெஞ் சான்றேம் உண்டேநாம் என்றாற் போல்வன திரிந்து முடிந்தன. பிறவும் அன்ன.