தொல்காப்பியம் 156 · எழுத்து 5.13

Section எழுத்ததிகாரம் / 5. தொகைமரபுPoet தொல்காப்பியர்Lines 1

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

இரு திணைக்கும் பொதுவான விரவுப்பெயர்களுள், உயர்திணைப் பெயர்களைப் போல இயல்பாகப் புணர்வனவும் உள. சாத்தன் குறியன், சாத்தி குறியள், கொற்றன் கை என வரும்.

இளம்பூரணர்

இளம்பூரணர் இரு திணைக்கும் பொதுவான விரவுப்பெயர்களுள் இயல்பாகப் புணர்வனவும் உள என நேர்பொருள் கொள்வார்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.

நச்சினார்க்கினியர்

உம்மையால் இயல்பின்றித் திரிந்து முடிவனவும் உள என்று கொள்கிறார். உயர்திணைக்குரிய ஆண்பால் பெண்பால் ஈறுகளோடு நின்றே அஃறிணைப் பொருளையும் உணர்த்துவதால் இவை அஃறிணை விரவுப்பெயர் எனப்பட்டன என்பது அவர் விளக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Among common nouns of the non-high class, there are also natural ones.

What the poem says

Viravuppeyar, "common nouns" that can denote either class, such as personal names like cāttaṉ or koṟṟaṉ, partly follow the high-class rule: some of them join without change. The "also" (um) implies that others do change. Nacciṉārkkiṉiyar's examples of the unchanged kind: cāttaṉ kuṟiyaṉ, cātti kuṟiyaḷ, koṟṟaṉ kai.

He spends some time on the name "non-high-class common noun": such names, though they carry the masculine and feminine endings of the high class, can be used of animals and things as well, so the grammar describes them as the non-high class merging with the high class. He promises to show elsewhere which ones change.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென்கின்றது.

இ-ள்: அஃறிணை விரவுப் பெயர்—உயர்திணைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர், இயல்புமாருள—இயல்பாய் முடிவனவும் உள, உம்மையான் இயல்பின்றி முடிவனவும் உள; எ-று.

உயர்திணைப் பெயரோடு அஃறிணை சென்று விரவிற் றென்றதென்னை சொல்லதிகாரத்து ‘இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையின்’ (சொல்-௧௭௨) என்று சூத்திரஞ் செய்வாராலெனின், அதுவும் பொருந்துமாறு கூறுதும். சாத்தன் சாத்தி, முடவன் முடத்தி என வரும் விரவுப் பெயாக்கண் உயர்திணைக்கு உரித்தாக ஓதிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தி நின்ற ஈற்றெழுத்துக்களே அஃறிணையாண்பாலும் பெண்பாலும் உணர்த்திற்றென்றல் வேண்டும்; என்னை? அஃறிணைக்கு ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த்தும் ஈறன்றி ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் ஈறுகள் உளவாக ஆசிரியர் ஓதாமையின்; அங்ஙனம் உயர்திணை இருபாலும் உணர்த்தும் ஈறுகள் நின்றே அஃறிணையாண்பாலையும் பெண்பாலையும் உணர்த்துதலின், அஃறிணை உயர்திணையோடு சென்று விரவிற் றென்று அவற்றின் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவான் ஈண்டுக் கூறினார். இவ்வாறே விளிமரபின்கட் ‘கிளந்த விறுதி யஃறிணை விரவுப் பெயர்’ (எழு-௧௫௦) என்புழியும் ஆசிரியர் உயர்திணையோடு அஃறிணை விரவிய விரவுப் பெயரென ஆண்டும் உண்மைத் தன்மைத் தோற்றங் கூறுவர். மாணாக்கன் இனிது உணர்தற்கு இவ்வாறு விரவுப் பெயரினது உண்மைத் தன்மைத் தோற்றம் இரண்டு அதிகாரத்துங் கூறி, அவ் விரவுப் பெயர் வழக்கின்கண் இருதிணைப் பொருளும் உணர்த்தி இருதிணைச் சொல்லாய் நிற்றற்கும் ஒத்த உரிமையவா மெனப் புலப்பட நிற்குமாறு காட்டினாரென்று உணர்க.

இனி, அவை அல்வழிக்கண் இயல்பாய் நிற்குமாறு:—சாத்தன் கொற்றன் சாத்தி கொற்றி என நிறுத்திக் குறியன் சிறியன் தீயன் பெரியன் குறியள் சிறியள் தீயள் பெரியள் எனவும், ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் யாவள் வலியள் எனவும், அடைந்தான் ஔவித்தான் அடைந்தாள் ஔவித்தாள் எனவும் நான்கு கணத்தோடும், ஒட்டி உணர்க. இனி வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஔவியம் எனவும் ஒட்டுக. இவற்றுள் னகாரம் நிற்பத்தகார நகாரம் வந்துழித் திரியும் உதாரணம் ஈண்டுக் கொள்ளற்க. இனிச் சாத்தன் குறிது சாத்தி குறிது என அஃறிணை முடிபு பேற்பனவுங் கொள்க. இவற்றொடு வினைச்சொல் தலைப்பெய்ய இவை இரு திணைக்கும் உரியவாம். ஆண்டு நாற்பத் தெட்டுச் சூத்திரங்களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார். இஃது உயர்திணைக்கும் ஒக்கும். உம்மையான் இயல்பின்றி முடிவன னகர ஈற்றுட் காட்டுதும்.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḵṟiṇai viravuppeyar iyalpumār uḷavē.