தொல்காப்பியம் 211 · எழுத்து 7.8
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
அன்ன என்னும் உவமச் சொல்லும், அண்மையில் இருப்பவரை விளிக்கும் விளிச்சொல்லும், செய்ம்மன என்னும் வாய்பாட்டு வினைச்சொல்லும், ஏவல் கருதிய வியங்கோள் வினையும், செய்த என்னும் பெயரெச்சமும், செய்யிய என்னும் வினையெச்சமும், அம்ம என்னும் அழைப்புச் சொல்லும், பன்மை உணர்த்தும் அகர ஈற்றுச் சொற்களும் ஆகிய இவை அனைத்தின் முன்னும் வல்லெழுத்து மிகாமல் இயல்பாகும் என்று புலவர் கூறுவர். பொன்னன்ன குதிரை, ஊர கேள், உண்மன குதிரை, உண்ட குதிரை, உண்ணிய கொண்டான், அம்ம கொற்றா, பல குதிரை என வரும்.
இளம்பூரணர்
இளம்பூரணர் அன்ன என்னும் உவமச்சொல், அண்மை விளி, செய்ம்மன என்னும் வினை, வியங்கோள், செய்த என்னும் பெயரெச்சம், செய்யிய என்னும் வினையெச்சம், அம்ம என்னும் சொல், பன்மை அகர ஈறு ஆகியவற்றின் முன் வல்லெழுத்து மிகாது இயல்பாகும் என நேர்பொருள் கொள்வார்; இவர் ஒவ்வொன்றுக்கும் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
பல்ல, சில்ல போன்ற வடிவங்கள் தம் காலத்தில் வழங்கவில்லை என்றும், உண்டன குதிரை போன்ற முற்றுவினைகளும் இவ்வாறே இயல்பாக முடியும் என்றும் கூறுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The comparison word called aṉṉa,
- the vocative word that points to someone near,
- the verb word ending in the form ceymmaṉa,
- the optative word aimed at command,
- the adjectival participle called ceyta,
- the verbal participle called ceyyiya,
- the word of address called amma,
- including the giving of nouns that end in plural sense,
- all these are natural, they say.
What the poem says
A list of a-final words that do not double a following hard consonant: the comparison word aṉṉa "like" (poṉṉaṉṉa kutirai "a horse like gold"); the vocative of a person near, such as ūra "O lord of the town" (ūra kēḷ "listen, lord"); the old verb form ceymmaṉa (uṇmaṉa kutirai "the horses will eat"); the optative viyaṅkōḷ (varuka, celka); the adjectival participle of the ceyta type (uṇṭa kutirai "the horse that ate"); the participle of the ceyyiya type (uṇṇiya koṇṭāṉ "he took, in order to eat"); amma, a word that calls attention (amma koṟṟā); and plural a-final words such as pala, cila, uḷḷa, illa (pala kutirai "many horses").
Nacciṉārkkiṉiyar says that "aimed at command" covers optatives that command fully and those addressed to things that cannot obey. He adds that pallа and cilla were old forms not current in his day, and that finite verbs in -a such as uṇṭaṉa kutirai also join naturally.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இஃது அகர ஈற்றுள் ஒருசார் பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன்னெய்தியது விலக்கியும் எய்தாத தெய்வித்தும் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) அன்ன என்னும் உவமக் கிளவியும்—அன்ன என்று சொல்லப்படும் உவமவுருபாகிய அகர ஈற்று இடைச்சொல்லும், அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்—அணியாரைக் கருதின விளியாகிய நிலைமையினையுடைய அகர ஈற்று உயர்திணைப் பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்னுந் தொழிலிறு சொல்லும்—செய்ம்மன என்று சொல்லப்படுந் தொழிற்சொற் பொருள் தருங்கால் உம் ஈற்றான் இறுஞ் சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்—ஒருவரான் ஏவற்றொழின்மை கருதிக் கூறப்பட்ட ஏவற் பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகர ஈற்று வினைச் சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும்—செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும்—செய்யிய என்று சொல்லப்படுகின்ற வினையெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்—அம்ம என்று சொல்லப்படும் எதிர்முகமாக்கிய அகர ஈற்று இடைச்சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட—பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஐந்தினையும் முற்கூறியவற்றோடு கூட்டிக் கொடுத்தல் உள்ளிட்டு, அன்றி அனைத்தும் இயல்பென மொழிப—அவ் வெட்டுச் சொல்லும் இயல்பாய் முடியுமென்று கூறுவர் ஆசிரியர்; எ-று.
(எ-டு.) பொன்னன்ன குதிரை செந்நாய் தகர் பன்றி என இது ‘வினை யெஞ்சு கிளவி’ (எழு-௨௦௪) என்பதனான் மிக்குமுடிதலை விலக்கிற்று. ஊர கேள் செல் தா போ என ‘உயிரீறாகிய வுயர்திணை’ என்னுஞ் சூத்திரத்தான் இயல்பாய் முடிவது ஈண்டு னகரங் கெட்டு அகர ஈறாய் விளியேற்று முடிந்தமையின் எய்தாத தெய்துவித்தது. உண்மனகுதிரை செந்நாய் தகர் பன்றி என்பனவற்றிற்கு உண்ணுமென விரித்தும் யானுண்மன நீயுண்மன அவனுண்மன என நிறுத்திக் கூழ் சோறு தேன் பால் என வருவித்தும் முடிக்க. இவற்றிற்கும் [?]வாறே விரித்துக் கொள்க. இங்ஙனஞ் செய்யு மென்பதன் பொருட்டாகிய மனவெ னிறுதிச் சொல் அக்காலம் வழங்கியதாதலின் ஆசிரியர் அதனையும் வேறாக எடுத்தோதினார். யானும் நின்னோடுடன் வருக அவன் செல்க அவள் செல்க அவர் செல்க என நிறுத்திக் காட்டின்கண் செருவின்கண் தானைக்கண் போரின்கண் என வருவித்து முடிக்க. இவை ஏவற் பொருண்மையை முற்ற முடித்தன. ஏவல் கண்ணிய எனவே ஏவல் கண்ணாதனவும் உளவாயின; அவை நீ செல்க அது செல்க அவை செல்க என நிறுத்தி முற்கூறிய காடு முதலியவற்றை வருவித்து முடிக்க. இவை ஏவற்பொருண்மையை முற்ற முடியாதன. அஃறிணை ஏவற் பொருண்மையை முற்ற முடியாமை வினையியலுள் வியங்கோட் கண்ணே பொருளியலுஞ் செய்யுளியலும்பற்றிக் கூறுதும். மனவும் வியங்கோளும் எய்தாததெய்துவித்தது. உண்டகுதிரை செந்நாய் தகர் பன்றி இதுவும் அது. இதற்கு உரிய உண்ணாத குதிரை யென்னும் எதிர்மறையும் நல்ல குதிரை யென்னுங் குறிப்புங் கொள்க. உண்ணிய கொண்டான் சென்றான் தந்தான் போயினான் இது முன்னர் வினையெச்சம் வல்லெழுத்துப்பெறுக என்றலின் எய்தியது விலக்கிற்று. அம்ம கொற்ற சாத்தா தேவா பூதா என்பது இடைச்சொல்லாதலின் எய்தாத தெய்துவித்தது. இது கேளாய் கொற்றனே என எதிர்முகமாக்கியவாறு காண்க. பல்ல குதிரை பல குதிரை சில்ல குதிரை சில குதிரை உள்ள குதிரை இல்ல குதிரை செந்நாய் தகர் பன்றி என ஒட்டுக. இக்காலத்துப் பல்ல சில்ல என்பன வழங்கா. இதுவும் விளக்குறிது என்றாற் போலப் பலக் குதிரை யென வல்லெழுத் தெய்தியதனை விலக்கிற்று. விளிநிலைக் கிளவியாகிய பெயர் முற்கூறாததனானே செய்யுமென்பதன் மறையாகிய செய்யாத வென்பதற்கும் இவ்வியல்பு முடிபு கொள்க. அது வாராத கொற்றனென வரும். இவ்வியல்பு முடிபிற்குச் செய்ம்மன சிறத்தலின் வியங்கோட்கு முன் வைத்தார். ஏவல் கண்ணிய என்பதனான் ஏவல் கண்ணாததும் உளதென்று கூறி ‘மன்னிய பெருமநீ’ (புறம்-௯௧) என உதாரணங் காட்டுக வெனின், அது பொருந்தாது; கூறுகின்றான் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல் கண்ணிற்றேயாம். எல்லாவற்றினுஞ் சிறந்த பலவற்றிறுதி முற்கூறுக வெனின், அது வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேறு வேறு முடிபுடைத் தென்றற்குஞ் செய்யுண் முடிபு இவ்வியல்பு போற் சிறப்பின்றென்றற்கும் அகர ஈற்றுள் முடிபு கூறாது நின்ற முற்றுவினையும் வினைக்குறிப்பும் இவ்வியல்பு முடிபு பெறுமென்றற்கும் பின் வைத்தார். உண்டன குதிரை இது முற்றுவினை. கரியன குதிரை இது முற்றுவினைக் குறிப்பு. இஃது இயல்புகணத்து முடிபு ‘ஞநமயவ’ (எழு-௧௪௪) என்புழிப் பொருந்துவன வெல்லாங் கொள்க.