தொல்காப்பியம் 215 · எழுத்து 7.12
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
பல, சில என்னும் சொற்களின் முன் அதே சொல் வந்தால், இறுதி அகரம் கெட்டு லகரம் றகர ஒற்றாக மாறுதலும் உண்டு. பற்பல, சிற்சில என வரும்.
இளம்பூரணர்
இளம்பூரணர் பல, சில என்பவை தம் முன் தாமே வரும்போது லகரம் றகர ஒற்றாகித் திரிதலும் உண்டு என நேர்பொருள் கொள்வார்; பற்பல, சிற்சில என்பவை இதற்குரிய எடுத்துக்காட்டுகள்.
நச்சினார்க்கினியர்
உம்மையால் திரியாமல் பலபல என வருதலும் உண்டு என்றும், பிற சொற்கள் வரும்போது அகரம் கெட்டு லகரம் நிற்கும் (பல்கடல், பல்யானை, சில்காடு) என்றும் கூறுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If a non-compound final comes after itself,
- its l becoming an ṟ consonant is also allowed.
What the poem says
"A non-compound final" here means the one-unit words pala and cila. When one of them is followed by itself, the final a drops and the l turns to ṟ: pala + pala gives paṟpala "very many", cila + cila gives ciṟcila. Nacciṉārkkiṉiyar notes that the form need not change (palapala also occurs), and that by implication, when other words follow, the a drops but l stays: palkaṭal "many seas", palyāṉai, cilkāṭu.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது பல சில என்பனவற்றிற்கு இயல்பேயன்றித் திரியும் உண்டென எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
(இ-ள்.) தொடர் அல் இறுதி—தொடர்மொழி யல்லாத ஈரெழுத் தொருமொழியாகிய பல சில என்னும் அகர ஈற்றுச் சொல், தம்முன் தாம் வரின்—தம் முன்னே தாம் வருமாயின், லகரம் றகரவொற்று ஆகலும் உரித்து—தம் ஈற்றில் நின்ற லகரவொற்று றகரவொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து எ-று.
உம்மையாற் றிரியாமையும் உரித்தென்றார்.
(எ-டு.) பற்பல கொண்டார் சிற்சில வித்தி என வரும். அகர ஈற்றுச் சுட்டல்லாத குற்றெழுத்து ஓரெழுத் தொருமொழி யாகுவன இன்மையின் தொடரலிறுதி யெனவே ஈரெழுத்தொருமொழியே உணர்த்திற்று. தன்முனென்னாது தம்முன்னென்ற பன்மையாற் பல சில என நின்ற இரண்டுந் தழுவப்பட்டன.
தம்முன்வரினென்னாது தாமென்றதனாற் பலவின்முன் பல வருதலுஞ் சிலவின் முன் சில வருதலுங் கொள்க. லகரம் றகர வொற்றா மென ஒற்றிற்குத் திரிபு கூறி அகரங் கெடுதல் கூறிற்றில ரெனின், அது வாராததனால் வந்தது முடித்தலென்னும் உத்தி பெறவைத்ததென்று உணர்க. இதனை ஞாபகமென்பாரும் உளர். அருத்தாபத்தியால் தம்முன் தாம் வரினெனவே தம்முன் பிற வரின் லகரம் றகரவொற் றாகாது அகரம் கெடுமென்று கொள்ளப்படும்.
(எ-டு.) பல்கடல் சேனை தானை பறை எனவும், பல்யானை பல்வேள்வி எனவும், சில்காடு சேனை தானை பறை எனவும், சில்யானை சில்வேள்வி எனவும் வரும். உரித்தென்றது அகர ஈற் றொருமை பற்றி.