தொல்காப்பியம் 231 · எழுத்து 7.28

Section எழுத்ததிகாரம் / 7. உயிர்மயங்கியல்Poet தொல்காப்பியர்Lines 1

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

யா, பிடா, தளா என்னும் மூன்று பெயர்களுக்கும் மெல்லெழுத்தே அன்றி வல்லெழுத்து மிகுந்தாலும் குற்றம் இல்லை. யாஅக்கோடு, பிடாஅக்கோடு, தளாஅக்கோடு என வரும்.

இளம்பூரணர்

இளம்பூரணர் அம்மூன்று பெயர்க்கும் வல்லெழுத்து மிகுந்தாலும் குற்றமில்லை என நேர்பொருள் கொள்வார்; யாஅக்கோடு போன்றவை இதற்குரிய எடுத்துக்காட்டுகள்.

நச்சினார்க்கினியர்

மானம் இல்லை என்றதனால் யாவின்கோடு என இன் சாரியை பெறுதலும், யாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலும் கொள்ளப்படும் என்று கூறுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even if the hard consonant is doubled, there is no fault.

What the poem says

The three trees may also double the hard consonant instead of taking the nasal: yāakkōṭu, piṭāakkōṭu, taḷāakkōṭu. Nacciṉārkkiṉiyar reads "no fault" as also allowing the increment iṉ, with no doubling (yāviṉkōṭu, piṭāviṉkōṭu), and attu (yāattukkōṭu).

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது, அகரத்தோடு மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்தும் பெறு மென்றலின்.

(இ-ள்.) வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை—முற்கூறிய மூன்று பெயர்க்கும் மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்றமில்லை; எ-று.

(எ-டு.) யாஅக்கோடு பிடாஅக்கோடு தளாஅக்கோடு செதிள் தோல் பூ என வரும். மானமில்லை என்றதனால் இம் மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. யாவின்கோடு பிடாவின்கோடு தளாவின்கோடு என வரும். சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது.

இன்னும் இதனானே யாஅத்துக்கோடு பிடாஅத்துக்கோடு தளாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலுங் கொள்க, அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின்.

யாமரக் கிளவி யென்பதனைக் ‘குறியதன் முன்னர்’ (எழு-௨௨௬) என்பதன்பின் வையாத வதனான் இராவிற் கொண்டான் நிலாவிற் கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1valleḻuttu mikiṉum māṉam illai.