தொல்காப்பியம் 24 · எழுத்து 1.24
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
முன் சொன்ன நான்கனுள், லகர ளகரப் புள்ளிகளின் முன்னர் க, ச, ப மட்டுமன்றி ய, வ என்பனவும் வந்து மயங்கும். கொல்யானை, செல்வம், வெள்யாறு, கள்வம் என்பவை எடுத்துக்காட்டுகள்.
இளம்பூரணர்
இளம்பூரணர் லகர ளகரப் புள்ளிகளின் முன் யகரமும் வகரமும் மயங்கும் என நேர்பொருள் கொள்வார்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
கொல்யானை வினைத்தொகை, வெள்யாறு பண்புத்தொகை; இவற்றை ஆசிரியர் ஒரு சொல்லாகவே கொண்டார் என்று கூறுகிறார். ஒரு சொல்லுக்குள்ளே இவ்வாறு மயங்கிய சொற்கள் அக்காலத்தில் இருந்து பின்னர் வழக்கொழிந்தன என்றும் அவர் கருதுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Among them,
- after l and ḷ, y and v also appear.
What the poem says
Of the four letters just named, l and ḷ may also be followed by y and v. Nacciṉārkkiṉiyar's examples are kolyāṉai, celvam, veḷyāṟu and kaḷvam.
He points out that kolyāṉai (a verbal compound) and veḷyāṟu (an adjectival compound) are really two-word compounds, but this author treats such compounds as single words; in his time some words also had these clusters within a single word, and those have since died out.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இதுவும் அது.
இ - ள் ; அவற்றுள்—முற்கூறிய நான்கனுள், லளஃகான் முன்னர்—லகார ளகாரமாகிய புள்ளிகளின் முன்னர், யவவுந்தோன்றும்—கசபக்களே யன்றி யகர வகரங்களும் வந்து மயங்கும்; எ - று.
கொல்யானை செல்வம் வெள்யாறு கள்வம் என வரும்.
இவற்றுட் கொல்யானைஎன வினைத்தொகையும் வெள்யாறு எனப் பண்புத்தொகையும் நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின் ‘மருவின் பாத்திய’ என்று கூறுவாராதலின் இவ்வாசிரியர் இவற்றை ஒரு மொழியாகக் கொள்வரென்று உணர்க. இக்கருத்தானே மேலும் வினைத்தொகையும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக் கொண்டு உதாரணங் காட்டுதும். அன்றி இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத் தொகைக்கண்ணும் பண்புத்தொகைக்கண்ணுமன்றி ஒரு மொழிக்கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் போதலே நன்றென்று கூறலும் ஒன்று.