தொல்காப்பியம் 262 · எழுத்து 7.59
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
ழகரத்தோடு கூடி உகரத்தில் முடியும் சொல், உகரம் நீண்டு அதன் பின் ஓர் உகரமும் பெற்று வருதல் உண்டு. எழு என்பது எழூஉக்கதவு, எழூஉச்சிறை என வரும்.
இளம்பூரணர்
இவர் உரையும் இந்நூற்பா ழகர உகர ஈற்றுச் சொல் நீண்டு உகரம் பெறுவதைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
இடன் உடைத்து என்றதனால் நீளாமலும் வரும், குழுத்தோற்றம் போல என்பார். செய்யுளில் பெரும்பாலும் இவ்வாறு நீண்டு வரும் என்பதற்குக் குழூஉக்களிறு, பழூஉப்பல் போன்றவற்றை அவர் காட்டுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The u of ḻu has room to lengthen;
- a u coming in that place.
What the poem says
Words ending in ḻu, such as eḻu "bolt", may lengthen the u and add another u (the aḷapeṭai sign) before a hard consonant: eḻūukkatavu "a door with a bolt", and eḻūuc ciṟai, eḻūut tāṉai, eḻūup paṭai. Nacciṉārkkiṉiyar says "has room" means it does not always happen: kuḻuttōṟṟam keeps the short form. He adds that in verse lengthening is the common usage, citing kuḻūuk kaḷiṟu from Puṟanāṉūṟu and paḻūup pal from Kuṟuntokai.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. வல்லெழுத்தினோடு உகரம் பெறுதலின்.
(இ - ள்.) ழகர உகரம் நீடிடன் உடைத்து — உகர ஈற்றுச் சொற்களுள் ழகரத்தோடு கூடிய உகர ஈற்றுச்சொல் நீண்டு முடியும் இடனுடைத்து ஆவயின் ஆன உகரம் வருதல் — அவ்விடத்து உகரம் வந்து முடியும்; எ - று.
(எ - டு ) எழூஉக்கதவு சிறை தானை படை என வரும்.
நீடிடனுடைத்து என்றதனான் நீளாதும் உகரம் பெறாதும் வருவதுமாயிற்று. குழுத்தோற்றம் என வரும்.
இன்னும் இதனாற் பழுக்காய் என அல்வழிக்கண்ணும் இவ்விதி யன்றி வருதல் கொள்க.
ஆவயினான என்றதனாற் பெரும்பான்மை செய்யுட்கண் நீண்டு உகரம் பெற்று,
“எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர் குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின்’ (புறம்-௧௭)
எனவும்,
“பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி” (குறுந்-௧௮௦)
எனவும் வருதல் கொள்க.