தொல்காப்பியம் 274 · எழுத்து 7.71
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தெளிவுப் பொருளில் வரும் எகரமும் சிறப்புப் பொருளில் வரும் ஒகரமும், மேலே கூறியபடி மூன்று இடத்துக்கும் உரியவை; அவற்றின் முன் வல்லெழுத்து மிகாது. யானேஎ கொண்டேன், நீயேஎ கொண்டாய், யானோஒ கொடியன் என வரும்.
இளம்பூரணர்
இவர் உரையும் இந்நூற்பா தேற்ற எகரமும் சிறப்பு ஒகரமும் வல்லெழுத்து மிகாமல் நிற்பதைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
முன்னிலை ஏவலில் வரும் எகர ஒகரங்களுக்கு மட்டுமே வல்லெழுத்து மிகும் என்று விளக்குகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The e of certainty and the o of emphasis
- do not double the hard consonant stated above.
What the poem says
The particles e (certainty) and o (emphasis), allowed by the previous rule in all three persons, do not double a following hard consonant. Nacciṉārkkiṉiyar's examples show them added to a word: yāṉēe koṇṭēṉ "it was surely I who took it", nīyēe koṇṭāy, and yāṉōo koṭiyaṉ "I am indeed cruel", nīyōo koṭiyai. By contrast the imperative e and o of tol.273 do double.
He refers the lengthened writing of these particles to a rule in the Col book, and says the rule also shows that particles which receive a joining are listed and joined in this way.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்து எய்தாத தெய்துவித்தது.
(இ - ள்.) தேற்ற எகரமுஞ் சிறப்பின் ஒவ்வும் மேற் கூறு இயற்கை — முன்னர் அருத்தாபத்தியாற் பெயர்க்கண் வருமென்ற தேற்றப்பொருண்மையில் எகரமுஞ் சிறப்புப்பொருண்மையில் ஒகரமும் மூன்றிடத்தும் வருமென்ற இலக்கணத்தனவாம், வல்லெழுத்து மிகா — வல்லெழுத்து மிக்கு முடியா, எனவே முன்னிலைக்கண் வருமென்ற எகர ஒகரங்கள் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
(எ - டு.) யானேஎகொண்டேன் நீயேஎகொண்டாய் அவனேஎ கொண்டான் எனவும், யானோஒகொடியன் நீயோஒகொடியை அவனோஒகொடியன் எனவும் பெயர்க்கண் ஈறாய் இயல்பாய் வந்தவாறு காண்க. இது முன்னர் எய்திய இலக்கணம் இகவாமற் காத்தார். முன் நின்ற சூத்திரத்தின் முன்னிலைக்கும் வல்லெழுத்து மிகுத்து எய்தாததெய்துவித்தார். இச்சூத்திரத்திற்கு அளபெடுத்தல் ‘தெளிவினேயும்’ (சொல் ௨௬[?]) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. எனவே, முடிவுபெற்றுழி இங்ஙனம் இடைச்சொல்லும் எடுத்தோதிப் புணர்ப்பரென்பதூஉம் பெற்றாம்.