தொல்காப்பியம் 287 · எழுத்து 7.84
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
ஐகாரத்தில் முடியும் திங்கள் பெயர்களும் நாள் பெயர்களும், இகர ஈற்றுக்கு முன்பு சொன்னபடியே இக்கு, ஆன் என்னும் சாரியைகளைப் பெறும். சித்திரைக்குக் கொண்டான், கேட்டையாற் கொண்டான் என வரும்.
இளம்பூரணர்
இவர் உரையும் இந்நூற்பா ஐகார ஈற்றுத் திங்கள், நாள் பெயர்களும் இக்கு, ஆன் சாரியைகள் பெறுவதைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
சித்திரை என்பது நாள் பெயராக வந்தால் ஆன் சாரியை பெறும் என்று கூறுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Month and star names are as stated before.
What the poem says
Ai-final month and star names follow the rules already given for i-final ones (tol.248–249): a month name takes ikku before a verb (cittiraikkuk koṇṭāṉ "he took it in Cittirai"), a star name takes āṉ (kēṭṭaiyāṟ koṇṭāṉ "under Kēṭṭai"). Nacciṉārkkiṉiyar notes that when Cittirai is a star name it takes āṉ.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்குச் சாரியையும் வல்லெழுத்து விலக்கி ஆன்சாரியையும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதியும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதியுங் கூறுகின்றது.
(இ - ள்.) திங்களும் நாளும் — ஐகார ஈற்றுத் திங்களை உணரநின்ற பெயரும் நாளை உணரநின்ற பெயரும், முந்து கிளந்தன்ன — இகர ஈற்றுத் திங்களும் நாளும்போல இக்கும் ஆனும் பெற்று முடியும்; எ - று.
(எ - டு.) சித்திரைக்குக்கொண்டான் கேட்டையாற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். சித்திரை நாளாயின் ஆன்சாரியை கொடுக்க. வல்லெழுத்துக்கேடு முன்னர்க் ‘கடிநிலையின்று’ (எழு - ௨௮௫) என்றதனாற் கொள்க.
திங்கள் முற்கூறிய முறையன்றிக் கூற்றினால் உழைங்கோடு அமைங்கோடு உடைங்கோடு என மெல்லெழுத்துக் கொடுத்துங் கலைங்கோடு கலைக்கோடு என உறழ்ச்சி எய்துவித்துங் கரியவற்றுக் கோடு குறியவற்றுக் கோடு நெடியவற்றுக்கோடு என ஐகார ஈற்றுப் பண்புப் பெயர்க்கு வற்றுக்கொடுத்து ஐகாரங்கெடுத்து வற்றுமிசை யொற்றென்று ஒற்றுக் கெடுத்தும் அவையத்துக் கொண்டான் அவையிற் கொண்டான் என அத்தும் இன்னுங் கொடுத்தும் பனையின் மாண்பு கேட்டையினாட்டி[?] இயல்புகணத்துக்கண் இன் சாரியை கொடுத்தும் முடிக்க. ஐகார ஈறு இன்சாரியை பெறுதல் தொகை மரபினுட் கூறாமையின் ஈண்டுக் கொண்டாம்.