தொல்காப்பியம் 29 · எழுத்து 1.29
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
ய, ர, ழ என்னும் புள்ளிகளின் முன்னர், மொழிக்கு முதலாகும் எழுத்துகளும் ஙகரமும் வந்து மயங்கும். ஆய்க, ஆர்க, ஆழ்க; வாய்மை, நேர்மை, கீழ்மை; தெய்வம், சேர்வது, வாழ்வது என்பவை எடுத்துக்காட்டுகள்.
இளம்பூரணர்
இளம்பூரணர் ய, ர, ழ புள்ளிகளின் முன் மொழிக்கு முதலாகும் எழுத்துகளும் ஙகரமும் மயங்கும் என நேர்பொருள் கொள்வார். உம்மையால் நச்சினார்க்கினியர் கொள்ளும் கூடுதல் எழுத்துகளை இவரும் கொள்கிறாரா என்பது இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
உம்மையால் மொழிக்கு முதலாகாத சில எழுத்துகளும் இவ்வாறு வரும் என்று கொள்கிறார். ஙகரம் வரும் சொற்கள் அக்காலத்திலும் அரிதாகவே வழங்கியதால் அதைத் தனியே எடுத்துச் சொன்னார் என்றும் அவர் கூறுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After the dotted y, r, ḻ,
- the letters that begin words appear, and ṅ along with them.
What the poem says
After a pure y, r or ḻ, any letter that can begin a word may follow, and so may ṅ, which normally cannot begin a word.
Nacciṉārkkiṉiyar gives many examples: āyka, ārka, āḻka; āytal, ārtal, āḻtal; vāymai, nērmai, kīḻmai; teyvam, cērvatu, vāḻvatu. He takes the "also" to admit some letters that do not begin words, as in oyvu, cōrvu, vāḻvu, and gives vēyṅṅaṉam, vērṅṅaṉam, vīḻṅṅaṉam as words with ṅ that were current then but rare.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இதுவும் அது.
இ - ள் : யரழவென்னும் புள்ளி முன்னர்—யரழ என்று கூறப்படும் மூன்று புள்ளிகளின் முன்னர், முதலாகெழுத்தும்—மொழிக்கு முதலாமென மேற்கூறும் ஒன்பதெழுத்துக்களும், உம்மையான் மொழிக்கு முதலாகாத பிற எழுத்துக்களும், ஙகரமொடு தோன்றும்—ஙகாரமும் வந்து மயங்கும்; எ - று.
எ - டு : ஆய்க ஆர்க ஆழ்க, ஆய்தல் ஆர்தல் ஆழ்தல், ஆய்நர் ஆர்நர் ஆழ்நர், ஆய்பவை ஆர்பவை ஆழ்பவை, வாய்மை நேர்மை ஈழ்மை, எய்சிலை வார்சிலை வாழ்சேரி, தெய்வம் சேர்வது வாழ்வது, பாய்ஞெகிழி நேர்ஞெகிழி வாழ்ஞெண்டு, செய்யாறு போர்யானை வீழ்யானை என மொழிக்கு முதலாம் ஒன்பதும் வந்து மயங்கின. செய்யாறு என யகரத்தின் முன்னர் யகரம் வந்தது தன் முன்னர்த் தான் வந்ததாம்.
இனி உம்மையாற் கொண்ட மொழிக்கு முதலாகாதவற்றின்கண்ணுஞ் சில காட்டுதும் : ஓய்வு சோர்வு வாழ்வு. ஓய்வோர் சோர்வோர் வாழ்வோர், ஆய்ஞர் சேர்ஞர் ஆழ்ஞர் என வரும். பிற எழுத்துக்களோடு வருவன உளவேனும் வழக்குஞ் செய்யுளும் நோக்கிக் கூறிக் கொள்க.
இனி வேய்ங்ஙனம் வேர்ங்ஙனம் வேழ்ங்ஙனம் என மொழிக்கு முதலாகாத ஙகரம் இடைவந்த சொற்கள் அக்காலத்து வழங்கின என்று உணர்க, ஆசிரியர் ஓதுதலின். இதனை ‘ஙகரமொடு தோன்றும்’ எனப் பிரித்தோதினார் அக்காலத்தும் அரிதாக வழங்கலின்.
இனி வேய்கடிது வேர்கடிது வீழ்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என்பன காட்டின் அவை இரு மொழியாக நிலைமொழி வருமொழி செய்து மேற்புணர்க்கின்றன ஈண்டைக்காகா என மறுக்க.