தொல்காப்பியம் 38 · எழுத்து 2.5
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
ஆய்தம் ஒரு சொல்லுக்குள் குற்றெழுத்தின் பின்னர், உயிரோடு கூடிய வல்லின மெய் ஆறனுள் ஒன்றின் முன்னர் வரும். எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு என்பவை எடுத்துக்காட்டுகள்.
இளம்பூரணர்
இளம்பூரணர் ஆய்தம் குற்றெழுத்தின் பின்னும் உயிரோடு கூடிய வல்லெழுத்தின் முன்னும் வரும் என நேர்பொருள் கொள்வார்; எஃகு போன்றவை இதற்குரிய எடுத்துக்காட்டுகள்.
நச்சினார்க்கினியர்
வல்லெழுத்தின் மேல் ஏறிய உயிர் பெரும்பாலும் குற்றியலுகரமே; அஃகாமை, வெஃகாமை, அஃகி என்பவற்றில் பிற உயிர்களும் வரும் என்று கூறுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After a short letter, the dot of the āytam
- stands above the six hard ones joined with a vowel.
What the poem says
The āytam occurs inside a word after a short vowel and before one of the six hard consonants carrying a vowel: eḵku, kaḵcu, kaḵṭu, kaḵtu, kaḵpu, kaḵṟu.
Nacciṉārkkiṉiyar says the vowel on the following hard consonant is mostly the shortened u, but occasionally other vowels occur, as in aḵkāmai, veḵkāmai, aḵki. He also infers from the word "dot" that the āytam behaves as a consonant.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது நிறுத்தமுறையானே ஆய்தம் ஒரு மொழியுள் வருமாறு கூறுகின்றது.
இ-ள்: ஆய்தப் புள்ளி - ஆய்தமாகிய ஒற்று, குறியதன் முன்னர் உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்து — குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடு கூடிய வல்லெழுத்தாறின் மேலிடத்ததாய் வரும்; எ-று:
வல்லாறன் மிசைத்து என்றதனானும் ஈண்டுப் புள்ளி என்றதனானும், ‘ஆய்தத் தொடர்மொழி’ (எழு-௪௦௧) என மேற்கூறுதலானும் உயிரென்றது ஈண்டுப் பெரும்பான்மையுங் குற்றுகரமேயாம். சிறுபான்மை ஏனை உயிர்களையுங் கொள்க.
எ-டு: எஃது கஃசு கஃடு கஃது கஃபு கஃறு அஃது இஃது உஃது என வரும். கஃறீது முஃடீது என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி என்றதனானும் ஈண்டுப் புள்ளி என்றதனானும் ஆய்தமும் மெய்யாயிற்று. அஃகாமை வெஃகாமை அஃகி வெஃகி அஃகம் எனப் பிறவுயிர்களோடும் வந்தது. கஃசியாதெனத் திரிந்ததுவுங் குற்றியலுகரத்தோடு புணர்ந்ததாம்.