தொல்காப்பியம் 481 · எழுத்து 9.75
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
லகர, னகரப் புள்ளி ஈற்றுச் சொற்களின் முன், உம், கெழு என்னும் சாரியைகளும் அவை போன்ற பிறவும் செய்யுளில் சொற்களுக்கு இடையே தோன்றி, வேற்றுமைப் பொருள் தரும்படி நிற்கும். ‘வானவரி வில்லும் திங்களும் போலும்’ என்பதில் வில்லும் என்பது வில்லிடைத் திங்கள் என்று ஏழாம் வேற்றுமைப் பொருள் தருகிறது; ‘கல்கெழு கானவர்’ என்பது கல்லைக் கெழீஇய கானவர் என இரண்டாம் வேற்றுமைப் பொருள் தருகிறது.
இளம்பூரணர்
இவர் உரையும் இந்நூற்பா செய்யுளில் லகர, னகர ஈற்றின் முன் உம், கெழு போன்ற சாரியைகள் வருவதைக் கூறுகிறது எனக் கொண்டு, மேற்கூறிய பொருளையே தருவதாகக் கொள்ளலாம்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.
நச்சினார்க்கினியர்
புள்ளிமயங்கியலில் விடுபட்ட செய்யுள் முடிபை இந்நூற்பா கூறுகிறது என்று கூறுகிறார். இவ்வெடுத்துக்காட்டுகள் இவருடைய உரையில் உள்ளவை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After words ending in the dotted letters l and ṉ,
- um and keḻu, and others besides,
- of like custom, appearing between words,
- stand with full meaning in the joining of verse,
- in the sense where case is intended.
What the poem says
This and the next two nūṟpās close the Eḻuttatikāram. Here: after words ending in l or ṉ (left over from the chapter on consonant endings), particles such as um and keḻu, and others like them, may come in between two words in verse and carry a case meaning. Nacciṉārkkiṉiyar's examples: "vāṉavari villum tiṅkaḷum pōlum", where villum stands for "the moon within the rainbow" with a seventh-case sense; "kal keḻu kāṉavar", "mountain-dwellers who cling to the rocks", with a second-case sense.
He says this gives the verse treatment left out of the chapter on consonant endings, and extends "others of like custom" to keḻu after other words (paṇai keḻu, tuṟai keḻu) and to keḻu losing its u and lengthening its e, as in pūkkēḻ toṭalai. The reading of individual examples is his; the nūṟpā itself is general.
உரை · Commentary
நச்சினார்க்கினியர்
இது புள்ளிமயங்கியலுள் ஒழிந்துநின்ற செய்யுண்முடிபு கூறுகின்றது.
(இ-ள்.) லன என வரூஉம் புள்ளி இறுதி முன் — லகார னகாரமென்று கூற வருகின்ற புள்ளியீற்றுச் சொற்களின் முன்னர், உம்முங் கெழுவும் உளப்பட — உம்மென்னுஞ் சாரியையுங் கெழுவென்னுஞ் சாரியையும் உட்பட, பிறவும் அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி — பிறசாரியையும் அப்பெற்றிப்பட்ட மரபினையுடைய மொழியிடத்தே தோன்றி, செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும் — செய்யுட் சொற்களைத் தொடர்புபடுத்திக் கூறுமிடத்துப் பொருள்பட நிற்கும், வேற்றுமை குறித்த பொருள்வயினான — வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண்; எ-று.
(எ-டு.) ‘வானவரி வில்லுந் திங்களும் போலும்’ இதற்கு உம்மென்னுஞ் சாரியையின் மகரத்தை ‘அம்மினிறுதி’ (எழு-௧௨௧) என்னுஞ் சூத்திரத்துள் ‘தன்மெய்’ என்றதனாற் பிறசாரியையுந் திரியுமென நகர ஒற்றாக்கி நிலைமொழி லகர ஒற்றின்மேல் உயிரேற்றி முடிக்க. வில்லுந் திங்களும் போலுமென்பதற்கு வில்லிடைத்திங்கள் போலுமென ஏழனுருபு விரித்துப் பொருளுரைக்க. ‘கல்கெழு கானவர் நல்குறு மகளே’ (குறுந் ௭௧). இதற்குக் கல்லைக் கெழீஇயின என உரைக்க. ‘மாநிதிக் கிழவனும் போன்ம்’ (அகம் — [?]) இதற்குக் கிழவனைப்போன்மென உரைக்க. இவ்வும்மை சிறப்பன்று. ‘கான்கெழு நாடு’ (அகம்-௧௮) இதற்குக் கானைக் கெழீஇய என உரைக்க.
இனி அன்னமரபின் மொழியிடை என்றதனாற் கெழுவென்றது பிற சொல்லிடத்தே ‘பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்’ ‘துறைகெழு மாந்தை’ (நற்றிணை-[?]) என இயல்பாக வருவனவும், ‘வளங்கெழு திருநகர்’ (அகம் — ௧௭) ‘பயங்கெழு மாமழை’ (புறம் — ௨௬௬) என நிலைமொழியீற்றெழுத்துத் திரிய வருவனவுங் கொள்க.
இன்னும் இதனானே இன்சாரியையது உகரக்கேடும் எகர நீட்சியுங் கொள்க. ‘பூக்கேழ் தொடலை நுடங்க வெழுந்து’ (அகம் — ௨௮) ‘துறைகேழூரன் கொடுமை நாணி’ (ஐங்குறு — ௧௧) இவற்றிற்கு இரண்டாவதும் ஏற்புழி மூன்றாவதும் விரிக்க. ‘செங்கேழ் மென்கொடி’ (அகம்-௮௦) என்புழிக் கெழுவென்னும் உரிச்சொல் ‘எழுத்துப் பிரிந்திசைத்தல்’ (சொல் - [?]) என்பதனான் நீண்டதென்று உணர்க. மெய் யென்றதனாற் பூக்கேழென்புழி வல்லொற்று மிகுதல் கொள்க.
இன்னுஞ் சான்றோர் செய்யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற்கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க.