தொல்காப்பியம் 50 · எழுத்து 2.17

Section எழுத்ததிகாரம் / 2. மொழி மரபுPoet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

குறுமையும் நெடுமையும் மாத்திரை அளவைக் கொண்டே கொள்ளப்படுவதால், பல எழுத்துகள் தொடர்ந்து நிற்கும் சொற்கள் எல்லாம் நெட்டெழுத்தைப் போல மிக்க மாத்திரை பெற்று இயங்கும். வருவர்கொல் வயங்கிழாஅய் என்ற கலித்தொகை அடியில் குற்றெழுத்துகள் கூடி நெடிலின் அளவைக் கடந்து நிற்பது எடுத்துக்காட்டு.

இளம்பூரணர்

இளம்பூரணர் இதனை வேறுவிதமாக, இதற்கு முந்தைய நூற்பாவின் தொடர்ச்சியாகக் கொள்வார்: புகர், புகழ் போன்ற பல எழுத்துத் தொடர்மொழிகள் அளவால் நெட்டெழுத்தின் இயல்புடையன; ஆகவே தார், தாழ் போல அவற்றின் இறுதியிலும் ரகர ழகர ஒற்று வரலாம் என்பது இவர் விளக்கம். இதைச் செய்யுளை நோக்கிய விதியாகக் கொள்ளும் நச்சினார்க்கினியர் இவ்விளக்கத்தை மறுக்கிறார்.

நச்சினார்க்கினியர்

இது செய்யுளை நோக்கிச் சொன்னது என்பது இவர் கருத்து. புகர், புகழ், தார், தாழ் போன்ற சொற்கள் நெட்டெழுத்தின் ஓசையுடையவை என்று உரையாசிரியர் கூறியதை அவர் மறுக்கிறார்.

இதன் பொருள் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since shortness and length are taken by measure,
  2. all multi-letter words behave like long letters.

What the poem says

Because short and long are defined by counting units of time, a sequence of letters can add up to more than a single long letter's two units. Nacciṉārkkiṉiyar takes the rule as meant for verse: in a line like varuvarkol vayaṅkiḻāay, the short letters together exceed the length of a long letter, and in the same way a long letter in verse can run past two units. He also extends this to consonants following short letters.

He records that the earlier commentator (uraiyāciriyar) explained the rule differently, saying that words like pukar, pukaḻ, tār, tāḻ, where r or ḻ ends a syllable, sound like long letters; he rejects this. The sense of the nūṟpā is genuinely disputed.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இஃது ‘அளபிறந் துயிர்த்தலும்’ (எழு-௩௩) என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் சூத்திரத்திற்குப் புறனடையாய் அதன்கண் நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது; என்னை? உயிரும் உயிர்மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ நெடிலோ இசைப்பதென மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயம் அறுத்தலின்.

(இ-ள்.) குறுமையும் நெடுமையும் — எழுத்துக்களது குறிய தன்மையும் நெடிய தன்மையும், அளவிற்கோடலின் — மாத்திரை யென்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின், தொடர்மொழியெல்லாம் — அம்மாத்திரை தம்முள் தொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத் தியல — நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்த சொல்லாம்; எ-று.

எ-டு: ‘வருவர்கொல் வயங்கிழாஅய்’ (கலி-௧௧) எனவும், ‘கடியவே கனங்குழாஅய்’ (கலி-௧௧) எனவுங் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத்தற்குக் கூடியவாறு உணர்க. ஏனைச் செய்யுட்களையும் இவ்வாறே காண்க. எனவே, மாத்திரை அளக்குங்கால் நெட்டெழுத்தே மாத்திரை பெற்று மிக்கு நிற்கும் என்றமையான், எதிரது போற்றலென்னும் உத்திபற்றிச் செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று, ஈண்டுக் கூறினார், நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்து வரும் என்பது அறிவித்தற்கு.

அளபென்று மாத்திரையைக் கூறாது அளவெனச் சூத்திரஞ் செய்தமையான் அளவு தொழின்மேல் நின்றது. அது செய்யுளியலுள் ‘மாத்திரையளவும்’ (செய்யுளியல்-௨) என்பதனானும் உணர்க. இயலவென்றதனைச் செயவெனெச்ச மாக்கிப் படுத்தலோசையாற் கூறுக.

இனித் தன்னின முடித்தலென்பதனான் ஒற்றிற்கும் இவ்வாறே கொள்க ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’ (அகம்-௪) என்ற குறுஞ்சீர்வண்ணத்திற்கு உரிய குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்தை மாத்திரை மிகுத்தற்குக் கூடிநின்றவாறு உணர்க. எனவே, குற்றெழுத்துக்களெல்லாம் ஒற்றெழுத்துக்களோடும் நெட்டெழுத்துக்களோடுங் கூடி அவற்றையே ஓசைமிகுத்து நிற்கும் என்றவாறாயிற்று. இதனானே ஒற்றிசை நீடலுமென்ற ஒற்றிசை நீளுங்காற் குற்றெழுத்தாய் நீளுமென்றார். இனி உரையாசிரியர் புகர் புகழ் எனக் குறிலிணைக்கீழ் ரகார ழகாரங்கள் வந்த தொடர்மொழிகளெல்லாந் தார் தாழ் என்றாற்போல ஓசையொத்து நெட்டெழுத்தின் தன்மையவாம் என்றாராலெனின், புகர் புகழ் என்பனவற்றை நெட்டெழுத்தென்றே எவ்விடத்தும் ஆளாமையானும் நெட்டெழுத்தாகக் கூறிய இலக்கணத்தால் ஒரு பயன் கொள்ளாமையானுஞ் செய்யுளியலுள் இவற்றைக் குறிலிணை ஒற்றடுத்த நிரையசையாகவும் தார் தாழ் என்பனவற்றை நெட்டெழுத்து ஒற்றடுத்த நேரசையாகவுங் கோடலானும் அது பொருளன்மை உணர்க.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṟumaiyum neṭumaiyum aḷaviṉ kōṭaliṉ
toṭarmoḻi ellām neṭṭeḻuttu iyala.