தொல்காப்பியம் 6 · எழுத்து 1.6

Section எழுத்ததிகாரம் / 1. நூல் மரபுPoet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

இரண்டு மாத்திரைக்கு மேல் நீட்டி ஒலிக்க வேண்டுமானால், அந்த அளவைத் தரும் எழுத்துகளைச் சேர்த்து எழுதி ஒலிக்க வேண்டும் என்று புலவர் கூறுவர். எடுத்துக்காட்டாக ஆஅ என்று எழுதினால் ஆகாரம் மூன்று மாத்திரை ஒலிக்கும். இதுவே அளபெடை.

இளம்பூரணர்

இளம்பூரணர் ஓசை நீட்டம் வேண்டும் இடத்தில் அந்த அளவுடைய எழுத்தைக் கூட்டி எழுத வேண்டும் என்று பொருள் கொண்டு, இதனை அளபெடை பற்றிய விதியாகவே கொள்வார்; இவர் தரும் எடுத்துக்காட்டுகள் இங்கு சரிபார்க்கப்படவில்லை.

நச்சினார்க்கினியர்

வழக்கிலும் செய்யுளிலும் ஓசைக்காகவும் பொருளுக்காகவும் இவ்வாறு நீட்டுவர் என்று விளக்குகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If lengthening is wanted, letters having those measures
  2. are added and sounded, say the learned.

What the poem says

When a sound longer than two units is needed, the extra length is supplied by writing an added letter of the right measure after the long vowel. This is aḷapeṭai, "prolongation": for example ā written with an added a is sounded as a three-unit ā.

Nacciṉārkkiṉiyar says this happens in both usage and poetry, for the sake of sound and of sense, and that the added letters are those able to give the desired length.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இ - ள் : நீட்டம் வேண்டின்—வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவாராயின், அவ்வளபு உடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்—தாங் கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக் கூட்டி அம்மாத்திரைகளை எழுப்புக என்று கூறுவர் ஆசிரியர்; எ - று.

கூட்டி யெழுப்புமாறு ‘குன்றிசைமொழி’ (எழு-௪௧) ஐ-ஔ என்னும் (எழு - ௪௨) என்பனவற்றான் எழுவகைத்தெனக் கூறுப.

ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ. ‘நெட்டெழுத்தேழே ஓரெழுத் தொருமொழி’ (எழு-௪௩) என்ற அந்நெட்டெழுத்துக்களே அளபெடுத்தலிற் சொல்லாதல் எய்தின. இனி ‘அளபெடை யசைநிலை யாகலு முரித்தே’ (செய்யுளியல்-௧௭) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தான் எழுத்தாந்தன்மையும் எய்திற்று.

இதுதான் இயற்கையளபெடையுஞ் செய்யுட்குப் புலவர் செய்துகொண்ட செயற்கை யளபெடையுமாய்ச் சொற்றன்மை எய்தி நின்று அலகு பெறுமாறுங் குற்றியலிகரக் குற்றியலுகரங்கள்போல எழுத்தாந்தன்மை எய்தி அலகு பெறாது நிற்குமாறும் அச்சூத்திரத்தான் உணர்க. எனவே, எழுத்தாந் தன்மையும் உடைமையின் அளபெடையோடு கூடி எழுத்து நாற்பது என்றலும் பொருந்திற்று. ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின் ஈண்டுக் கூறாராயினர்.

அவ்வளபுடைய எனப் பன்மையாகக் கூறியவதனான் இவரும் நான்கு மாத்திரையுங் கொண்டார். என்னை? இவ்வாசிரியரை ‘முந்துநூல் கண்டு’ என்றாராகலின். மாபுராணத்து,

“செய்யுட்க ளோசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்பா டின்றி யணையுமாம்—மைதீரொற் றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு குன்றுமே லொற்றளபுங் கொள்”

என்ற சூத்திரத்தான் அவர் கொண்ட நான்கு மாத்திரையும் இவ்வாசிரியர்க்கு நேர்தல்வேண்டுதலின். அது ‘செறாஅஅய் வாழிய நெஞ்சு’ (குறள்-௧௨௦௦) ‘தூஉஉத் தீம்புகைத் தொல்விசும்பு’ (மலைபடு-இறுதி வெண்பா) ‘பேஎஎர்த் துக்கொல்’ ‘இலாஅஅர்க்கில்லை தமர்’ (நாலடி-௨௮௩) ‘விராஅஅய்ச்செய்யாமை நன்று’ (நாலடி-௨௪௧) ‘மரீஇஇப் பின்னைப் பிரிவு’ (நாலடி ௨௨௦) எனச் சான்றோர் செய்யுட்களெல்லாம் நான்கு மாத்திரை பெற்று நின்றன. அன்றி மூன்று மாத்திரை பெற்றனவேல் ஆசிரியத்தளை தட்டுச் செப்பலோசை கெடுமாயிற்று. இங்ஙனம் அளபெடாது நின்று ஆசிரியத்தளை தட்டு நிற்பன கலிக்கு உறுப்பாகிய கொச்சக வெண்பாக்கள் : இவை அன்னவன்றென உணர்க.

கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம் போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா வோசையின அளபெடை யென்று ஆசிரியர் வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழியல்லது எண்ணெய் புலப்படாவாறுபோல என்று உணர்க. இனி அளபெடை யல்லாத ஓசைகளெல்லாம் இசையோசையாதலின் அவற்றை ‘அளபிறந்துயிர்த்தலும்’ (எழு-௩௩) என்னுஞ் சூத்திரத்தாற் கூறுப.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṭṭam vēṇṭiṉ av aḷapuṭaiya
kūṭṭi eḻūutal eṉmaṉār pulavar.