தொல்காப்பியம் 8 · எழுத்து 1.8

Section எழுத்ததிகாரம் / 1. நூல் மரபுPoet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

அகரம் முதல் ஔகாரம் ஈறாக உள்ள பன்னிரண்டு எழுத்துகளையும் உயிர் என்று கூறுவர்.

இளம்பூரணர்

இளம்பூரணர் அகரம் முதல் ஔகாரம் ஈறான பன்னிரண்டும் உயிர் என நேர்பொருளாகவே கொள்வார்; உயிர் என்ற பெயருக்கு இவர் தரும் காரணம் இங்கு சரிபார்க்கப்படவில்லை.

நச்சினார்க்கினியர்

மெய்களை இயக்கி ஒலிக்கச் செய்வதாலும் தனித்தும் நிற்பதாலும் இவை உயிர் எனப் பெயர் பெற்றன என்று விளக்குகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Ending with au,
  2. the twelve letters are called vowels, they say.

What the poem says

The twelve letters from a to au are named uyir, literally "life", that is, vowels.

Nacciṉārkkiṉiyar explains the name: the vowels are like life, because they make the consonants move and sound; and a vowel can also stand alone, unlike a consonant.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இது குறிலையும் நெடிலையும் தொகுத்து வேறோர் குறியீடு கூறுகின்றது.

இ - ள் : ஔகார இறுவாய்ப் பன்னீரெழுத்தும்—அகரம் முதலாக ஔகாரம் ஈறாகக் கிடந்த பன்னிரண்டெழுத்தும், உயிரென மொழிப—உயிரென்னுங் குறியினையுடைய என்றுங் கூறுவர் புலவர்; எ - று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி. மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறோர் எழுத்தின்றாம் பிறவெனின், மெய்யினிற்கும் உயிருந் தனியே நிற்கும் உயிரும் வேறென உணர்க. என்னை? ‘அகர முதல’ (குறள் - ௧) என்புழி அகரந் தனியுயிருமாய்க் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேறு நிற்றலின், அவ்வகரந் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம்மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையையுடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றேயாய் நிற்குந் தன்மையும் போல, அது அ என்ற வழியும் ஊர என விளியேற்ற வழியும் ‘அகர முதல’ என்றவழியும் மூவினங்களில் ஏறின வழியும் ஓசை வேறுபட்டவாற்றான் உணர்க. இங்ஙனம் இசைத்துழியும் மாத்திரை ஒன்றேயாம். இஃது ஏனை உயிர்கட்கும் ஒக்கும்.

ஔகார இறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்மை. ‘அகரமுதல்’ என முற்கூறிப் போந்தமையின் ஈண்டு ஈறே கூறினார்.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aukāra iṟuvāyp
paṉṉīr eḻuttum uyir eṉa moḻipa.