கம்பராமாயணம் Invocation · பால 0.1

Section பால காண்டம் / 0. தன் சிறப்பு பாயிரம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலகம் யாவையும் - எல்லா உலகங்களையும்; தாம் உள ஆக்கலும் - தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும்; நிலை பெறுத்தலும் - நிலைத்திருக்குமாறு காப்பதையும்; நீக்கலும் - அழித்தலையும்; நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் - என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர் தலைவர் - அவரே தலைவ ராவார்; அன்னவர்க்கே நாங்கள் சரண் - அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.

மங்கலச் சொல்லொடு தொடங்கவேண்டும் என்பது மரபு; அம்மரபின்படி 'உலகம்' என்ற மங்கலச் சொல் கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில் முதலாக எழுகிறது. உலகம் என்பது நிலையியற் பொருள், இயங்கியற் பொருள் (சர, அசரம்) எனவும் உயர்திணை, அஃறிணை எனவும், உயிர்ப்பொருள், உயிரில் பொருள் எனவும் பலவாறு குறிக்கப்படுகின்ற யாவற்றையும் உள்ளடக்கியது. தாம் உள ஆக்கல்: தன்னைப் படைப்பார் பிறர் இல்லாப் பரம்பொருள் தன் சங்கற்பத்தால் படைத்தல். உள ஆக்கல்; இல்லாததைப் படைத்தல் அன்று; நுண்பொருளைப் பருப்பொருளாக்குதல் என்று கூறுவர். "இல்லது தோன்றாது" என்பது தத்துவம்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை அருந்தொழில் பரமனுக்கு மிக மிக எளிது என்பதை 'விளையாட்டு' என்ற சொல்லாட்சி குறிக்கிறது. "காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" என முத்தொழிலை இறைவன் விளையாட்டாக மாணிக்கவாசகர் குறித்தது காண்க. (திருவெம்பாவை 12). இறைவனின் இவ்விளையாட்டுத் திறத்தை

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய் இன்பம்இல் வெம்நரகு ஆகி, இனியநல் வான் சுவர்க்கங்களுமாய் மன்பல உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.

என்ற நம்மாழ்வார் திருவாக்கால் (3. 10. 7) உணரலாம். விளையாட்டுடைய பெருமானைப் பெற்றமையால் ஏதும் அல்லல் இல்லை என்பதனால் கவிச் சக்கரவர்த்தி 'அத்தலைவருக்கே சரண் நாங்களே' என்கிறார்.

நீங்கலா அலகிலா என்ற பெயரெச்சங்கள் விளையாட்டு என்ற பெயர்க்கு விளக்க அடைகளாயின.

அன்னவர்க்கே ஏகாரம் பிரிநிலை யாயும் தேற்றமாகவும் கொள்ளத்தக்கது.

கம்பர் வைணவ சமயத்தர் என்பதை நிறுவுவதற்கு எண்ணற்ற அகச்சான்றுகள் உண்டு. "இயங்கு பல்லுயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்" என்ற தொடரை ஒரு சான்றாகக் கொள்ளலாம். அயோத்தியா காண்டம், சுந்தர காண்டம் ஆகியவற்றின் கடவுள் வாழ்த்துச் செய்யுள்களில் இராம பிரானையே பரம்பொருளாகக் கவிச்சக்கரவர்த்தி காட்டுவது தெளிவு. தமக்குரிய வழிபடு கடவுளாக வெளிப்படைச் சொற்களால் இராமபிரானை/ திருமாலை குறிப்பிடத் தயங்காதவர் கம்பர் அவர் காப்பியத் தொடக்கத்தில் பாடும் கடவுள் வாழ்த்தில் பொதுமை பேணுகிறார் என்பதை மனங்கொள்ளல் நலம். வலிந்து பொருள் கொள்வது என உறுதி செய்து கொண்டால் முதல் மூன்று பாடல்களுக்கும் வைணவச் சார்பான உரை வகுத்தல் கூடும். கம்பர் எண்ணியிருந்தால் பொதுமைச் சொல்லால் குறிக்காமல் வெளிப்படையாகவே திருமால் சீர் பாடியிருப்பாரே. ஏன் அவ்வாறு செய்யவில்லை எனச் சான்றோர் சிந்திக்கவேண்டும். கம்பரின் கடவுட் கொள்கை பற்றி மிக விரிவாக ஆராய்வதற்கு இங்கே இடமில்லை; எனினும், பரம்பொருள் பொதுவில் நின்று விளையாடுபவர் என்பதை ஏற்கும் வைணவர் அவர் என்று சுருங்கச் சுட்டி அமைவோம்.

சரண் நாங்களே என்ற தொடர் இராமாயணத்தைச் சரணாகதி சாத்திரம் என்று குறிக்கும் மரபை நினைவூட்டுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To make all the worlds come into being of their own will,
  2. to keep them standing, and to take them away: unending,
  3. measureless play is what they possess. They alone
  4. are the Lord, and in that one alone is our refuge.

What the poem says

This is the first verse of the Kamba Rāmāyaṇam, the invocation that opens the whole epic. The poet praises the Supreme Being who creates, sustains and dissolves every world, and calls these three great acts mere play: endless, boundless, and effortless for the Lord. The poem fittingly begins with the auspicious word for "world".

The verse speaks of God in general terms rather than naming Vishnu or Rāma, even though the poet was a Vaishnava who elsewhere names Rāma as the Supreme. The closing words, "in that one alone is our refuge", recall the tradition that treats the Rāmāyaṇa as a scripture of surrender.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakam yāvaiyum tām uḷavākkalum
nilaipeṟuttalum nīkkalum nīṅkalā
alaku ilā viḷaiyāṭṭu uṭaiyār avar
talaivar, aṉṉavarkkē caraṇ nāṅkaḷē.