கம்பராமாயணம் Invocation · பால 0.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வைத வைவின் - (பெரியோர்கள்) சாபமிட்டு வைது சொல்லும் வசவுச் சொல் உடனே பலிப்பது போல; மராமரம் ஏழ் தொளை எய்த - ஏழு மராமரங்களும் எய்தவுடனேயே தொளைபடும்படி; எய்தவற்கு எய்திய மாக்கதை - அம்பு எய்தவனுக்கு அமைந்த பெருமை மிகு கதையை; செய்த செய்தவன் - ஆதிகாவியமாக இயற்றிய தவ முனிவனாகிய வான்மீகியின்; சொல் நின்ற தேயத்தே - வாக்கு நிலை பெற்றிருக்கின்ற இந்த நாட்டில், நொய்தின் நொய்ய சொல் - எளிமையினும் எளிமையான சொற்களால், நூற்கலுற்றேன் - இந்நூலை இயற்றத் தொடங்கினேன்; எனை - என்னே வியப்பு!
நொய்ம்மை: மென்மை, எளிமை. இங்கே நொய்ய சொல், கருத்தூற்றமற்ற வெள்ளைச் சொல்லைக் குறித்தது. நிறைமொழி மாந்தர் அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் உடன் பலிக்கும், விளைவு குறித்தது இவண் வந்த உவமை. இராமபிரானின் திறம்பற்றிய நம்பிக்கை பற்றிச் சுக்கிரீவன் மனத்தில் ஐயம் தோன்றியபோது ஏழு மராமரங்களை ஒரே கணை எய்து, கணத்தில் துளைத்துக் காட்டிய செயல் இங்கே நினைவூட்டப்படுகிறது. இராமபிரானின் கதை சொல்லுதற்கு வான்மீகி முனிவர் பெருந்தவம் செய்திருக்க வேண்டும்; இக் குறிப்பினை 'மாக்கதை செய்த செய்தவன்' என்ற தொடர் தருகிறது. ஏழு என்பதன் இறுதிக் குற்றியலுகரம் தொக்கு, 'ஏழ்' என நின்றது. நூல் என்பது உவமையாகு பெயராகக் காப்பியத்தைச் சுட்டிற்று. என்னை என்ற வியப்புச் சொல் இடைக் குறைந்து எனை (என்னை வியப்பு) என நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- I have set out to spin words flimsier than flimsy: what a wonder!
- As a curse takes hold the moment it is spoken, the seven sal trees were pierced
- when he shot; the great story that came to that archer
- the sage of penance composed, and here, in the land where his word stands,
What the poem says
The poet continues his apology. He marvels at his own boldness in spinning slight, light words into a poem in the very land where Vālmīki's word still holds sway. Vālmīki, the sage of great austerity, composed the first epic about the hero who pierced seven sal trees with one arrow.
That feat comes later in the story: when Cukkirīvaṉ doubted Irāmaṉ's strength, Irāmaṉ shot a single arrow through seven great trees. The arrow's instant effect is compared to the curse of a holy person, which takes effect the moment it is uttered. The first line literally speaks of "spinning" a thread, and "thread" stands for the poem.