கம்பராமாயணம் Invocation · சுந்தர 1.1

Section சுந்தர காண்டம் / 1. கடவுள் வாழ்த்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ' அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!

பொருள் · Meaning in Tamil

மறைகளுக்கு இறுதியாவார் - வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற ஞானிகள்; எவரைக் கண்டால் - எவரைத் தரிசித்த உடனே; விலங்கிய பூதம் ஐந்தும் - ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும்; வேறுபாடு உற்ற வீக்கம் - வேறு வேறு விதமாக அமைந்த பன்மைத் தோற்றம், அலங்கலில் தோன்றும் பொய்ம்மை - மாலையில் தோற்றமளித்த பொய், அரவு என - பாம்பு போல; கலங்குவது - இல்லாது போதல் (நிகழுமோ); அவர் அன்றே - அவர் அல்லவா; கைவில் ஏந்தி - கரத்திலே கோதண்டத்தைத் தாங்கி, இலங்கையில் பொருதார் - இலங்கை மாநகரத்தில் போர் செய்தவர்; என்பர் - என்று கூறுவர்.

பொய்யான பாம்பு மெய்யான மாலையைக் கண்டு உண்மை தெரிந்தவுடன் மறையும். அதுபோலப் பொய்யான பிரபஞ்சம் மெய்யான பரம்பொருளைப் பார்த்ததும் மறையும். மெய்யுணர்ச்சி தோன்றியதும் பிரபஞ்சம் இறைவனாகவோ இறைவனின் மேனியாகவோ தோன்றும். உள்ளது - மாலை; உள்ளது - பரம்பொருள்; இல்லது - பாம்பு; இல்லது - பிரபஞ்சம். பிரபஞ்சத் தோற்றத்துக்கு ஆதாரமான பரம்பொருள் வில்லேந்தி வந்தது. ஐந்து பூதங்களும் தம்மிற் கலத்தலால் விகாரங்கள் உண்டாயின. கலத்தல் இது பஞ்சீகரணம் என்று பேசப்படும். ஈண்டுப் பூதம் என்றது தன் மாத்திரைகள். “தன்மாத்திரைகள் ஐந்தினையும் ஓரொன்று இரண்டாய்ப் பகுத்து, ஒன்றை நன்னாலாக்கித் தன்பாதி ஒழிந்த நாலின் உடன்கூட்டி இன்னே யல்லாதவை நான்கின் இயல்பிற்கூட்ட, வானாகி பின்னே தூல பூதமெனப் பிறக்கும்” என்று பிரம்ம கீதை பேசும். நிறைவாய் நிற்கும் அப்பிரமத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம்... கற்பனையினாலே செனித்த என்று கைவல்ய நவநீதம் பேசும்.

உள்பொருளின்கண் இல்லாத பொருளைக் காண்பதை “ஆரோபம்”, “அத்தியாயம்”, “கற்பனை” என்பர். இல்பொருளைக் காணாது உள் பொருளைக் காண்பதை “அபவாதம்” என்பர். ஆரோபம் “நாரூடு பணியாய்த் தோன்றல்!” என்றும், அபவாதம் 'அரவன்று, கயிறு என்றாற்போல்.... புரமன்று, புவனமன்று பூதங்கள் அன்று பிரம்மம் என்று தெளிவதே!' என்றும் கைவல்ய நவநீதம் கூறும்.

நக்கீரர், 'கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைவர்' என்றார் (முருகு 134-135). கவிச்சக்கரவர்த்தி மறைகளுக்கு இறுதியாவார் என்றார். மறைகளுக்கு இறுதியாவார் - உபநிடதமாக இருக்கும் ஞானிகள் - (எழுவாய்) முன்னோர்கள், இலங்கையில் பொருதார் மறைகளுக்கு இறுதியாவார் என்று பொருள் கொண்டனர்.

'எல்லாப்பொருளும் இராமபிரான்' என்று தமிழ் வேதம் பேசும். 'ஊனின் மேய ஆவி நீ, உறக்கமோ டுணர்ச்சி நீ. ஆனின் மேய ஐந்தும் நீ, அவற்றுள் நின்ற தூய்மை நீ, யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே' என்பது திருச்சந்த விருத்தம். (பிரபந்தம் - 845) பண்பும் பண்பியும், இவற்றுக்கு மூலகாரணமாகிய பூதங்களும் இவற்றுக்கு மூலப் பொருளாகிய இறைவனும் இராமபிரான் என்பது அப் பாசுரத்தின் உட்கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the false snake seen in a garland vanishes, so the five elements
  2. interwoven, and the swelling many-formed world of their transformations,
  3. dissolve when whom is beheld? “Him,” they say, “who, bow in hand,
  4. fought in Ilaṅkai, is it not?” those who are the very end of the Vedas.

What the poem says

This is the invocation that opens the Cuntara Kāṇṭam. It uses the classic Vedānta image of the rope, or here a garland, mistaken in dim light for a snake. The snake is unreal and disappears once the garland is seen for what it is. In the same way the visible world, built from the five elements mixed together, falls away as an illusion when one sees the true Reality.

Who is that Reality? The sages who stand at the summit of the Vedas answer: the one who took up his bow and fought in Ilaṅkai, that is, Irāmaṉ. The commentary connects the idea with Vedānta texts and with a Vaiṣṇava hymn that calls Irāmaṉ everything: the life in the body, sleep and waking, the elements and the self.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1alaṅkalil tōṉṟum poymmai aravu eṉap pūtam aintum
vilaṅkiya vikārappāṭṭiṉ vēṟupāṭu uṟṟa vīkkam
kalaṅkuvatu evaraik kaṇṭāl, ' avar eṉpar, kaivil ēnti
ilaṅkaiyil porutār aṉṟē, maṟaikaḷukku iṟuti yāvār!