கம்பராமாயணம் 10003 · யுத்த 36.242

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண்புக்கார்; கண்புக்க வேழ வில்லால்
நார நாண் மலர்க்கணையால், நாளெல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வலத்தினாலே!

பொருள் · Meaning in Tamil

உலகு இயற்கை அறிதக்கார் அன்னார் யார் - உலகின் இயல்பினை (முழுதும்) அறியத் தகுதியுடையவர் யார்? (யாரும் இல்லை); அவை - அந்த உலகம்; ஏழும் ஏழும் - பதினான்கும்; அஞ்சும் வீரனார் - அஞ்சத்தக்க இராவணனாரும்; உடல் துறந்து விண் புக்கார் - உடலைப் போட்டு விண்உலகம் போய்விட்டார்; கண் புக்க வேழவில்லால் - கணுக்கள் பொருந்திய கரும்பு வில்லால்; நாரம் நாள் மலர்க்கணை - (வண்டொழுக்கை) நாணாகக் கொண்ட அன்றலர்ந்த மலர்களின் கணையால்; நாள் எல்லாம் தோள் எல்லாம் - நாள் முழுவதும் தோள்கள் எல்லாம்; நைய - வருந்துமாறு; எய்யும் - எய்கின்ற; மாரனார் தனியிலக்கை - மன்மதனின் தனிப்பட்ட குறியை (இராவணனை); மனித்தனார் - மனிதராகிய இராமபிரான்; வரத்தினால் அழித்தனரே - அவர் வரத்தின் மேன்மையினால் அழித்து விட்டாரே!

இதுநாள் வரை உடலோடு பதினான்கு உலகமும் சென்று அச்சமூட்டி வெற்றியோடு திரும்பி வந்த இராவணன், இன்று உடலோடு செல்ல முடியாமல், தன் உடலைப் போட்டு விட்டு விண்ணுலகு செல்ல நேர்ந்ததே! இந்த உலகின் இயல்பை யாரால் உள்ளபடி அறிய இயலும் என்பது மண்டோதரியின் வியப்பு. கணுவையுடைய கரும்புவில்லும், மலர்க்கணையும் ஒரு மலையனைய மாவீரனின் தோள்களை நைய வைத்து விட்டனவே என்று காமத்தின் வலிமை செப்பியவாறு. காமன் விட்ட கணைகட்கு இலக்கானதன்றி இராவணன் மார்பு, மற்று யார் கணைக்கும் இலக்காக இருந்ததில்லையாதலால், "மாரனார் தனியிலக்கை" என்றாள்.

தேவர் பெற்ற வரத்தின் மேன்மையினால் மனிதர் இராவணன் அழித்துவிட்டனர் என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Who is there who can understand the ways of the world? The hero
  2. whom the seven and seven worlds feared has left his body and gone to heaven; the sole target
  3. of Māraṉ, who shot at him all day long, at all his shoulders, till they ached, with his bow of jointed cane
  4. and his arrows of fresh flowers on a string of bees — a man has destroyed him, by a boon!'

What the poem says

Vaṇṭōtari marvels at how unknowable the world is. The hero feared throughout the fourteen worlds, who used to roam them all in his body and return in triumph, has now left that body behind and gone to heaven.

The only archer who ever hit him was Māraṉ, the love god, with his sugarcane bow, bee-string and flower arrows, which wore down those mountainous shoulders. Now a mere man has killed him, by virtue of the boon the gods had won.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ār aṉār, ulaku iyaṟkai aṟitakkār? avai ēḻum ēḻum añcum
vīraṉār uṭal tuṟantu, viṇ pukkār; kaṇ pukka vēḻa villāl
nāra nāḷ malark kaṇaiyāl, nāḷ ellām tōḷ ellām, naiya eyyum
māraṉār taṉi ilakkai maṉittaṉār aḻittaṉarē, varattiṉālē!